சர்ச்சையைக் கிளப்பிய விஜய் தேவரகொன்டா டுவீட் | மீண்டும் கேரளாவுக்கு வருகிறார் சன்னி லியோன் | பாரபட்சம் காட்டுகிறார்கள் : அபர்ணா பாலமுரளி குமுறல் | பிரேமம் நடிகருக்கு வெளிச்சம் தருமா தொபாமா..? | பாய் பிரண்ட்டுக்கு புருவ அழகியின் பிறந்தநாள் வாழ்த்து | வழக்கறிஞரை அடித்தற்கு சந்தானத்தை பாராட்டும் நெட்டிசன்ஸ்..! | பிரசன்னா ஜோடியாக 2 கதாநாயகிகள் | சென்னையில் விஜய் 62 படப்பிடிப்பு | 3-வது முறையாக இணைந்த விஜய் சேதுபதி - அருண்குமார் | காட்டேரி நாயகிக்கு வைபவ் சிபாரிசு |
ஒரு வார கால தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அஞ்சலி, இன்று (திங்கள்கிழமை) முதல் போல்பச்சன் என்ற தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அதையடுத்து பலுப்பு என்ற தெலுங்கு படத்திலும் பேட்ச் ஒர்க்கை முடித்துக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார் அஞ்சலி. இதையடுத்து பதறிப்போயிருந்த ஆந்திர படாதிபதிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
மேலும், தன்னால் ஏற்பட்ட படப்பிடிப்பு இடையூறுகளுக்கு வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்து அஞ்சலி பேசிய வீடியோக்கள் இணையதளங்கள் மற்றும் தெலுங்கு சேனல்களில் வெளியாகி வருவதால், அனைவருக்கும் அஞ்சலி மீதான அதிருப்தி விலகி வருகிறதாம். இந்நிலையில் தனது பெயருக்கு ஏற்பட்ட களஙகத்தை மாற்ற, மேலும் சில முக்கிய சினிமா புள்ளிகளுக்கும் போன் போட்டு மன்னிப்பு கோரி வருகிறாராம் அஞ்சலி.
என்றாலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சலி புகார் அளித்திருந்ததால், ஐதராபாத்தில் அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளார்களாம்.