அஞ்சலி படப்பிடிப்புக்கு வராவிட்டால் அதிரடி நடவடிக்கை! டைரக்டர் களஞ்சியம் மிரட்டல்! - Anjali intimidating Director Kalanjiam!
Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜெயராமுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய மம்முட்டி..! | விக்ரமுடன் நடிக்க விரும்பும் பஹத் பாசில் நாயகி..! | மேக்கப் பையன் பாடிய பாட்டை தனது படத்தில் பயன்படுத்திய திலீப்..! | முதல்வருக்காகவும், காவிரி பிரச்னைக்காகவும் ரஜினியின் அண்ணன் வழிபாடு | அக்காவின் அகாடமிக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகிறார் கீர்த்தி சுரேஷ்..! | ரஜினி இளைய மகளுக்கு வலது கரமான தனுஷ் | ஜெய்க்கு நம்பிக்கை கொடுத்த படம்! | தற்கொலை மிரட்டல் விடுத்த காமெடியன் சதீஷ்! | ஏ.ஆர்.முருகதாஸை திக்குமுக்காட வைத்த அஜித்-விஜய் ரசிகர்கள்! | செளந்தர்யா ரஜினி இயக்கும் ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' - நடிக்க ஆள் தேடுகிறார்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலி படப்பிடிப்புக்கு வராவிட்டால் அதிரடி நடவடிக்கை! டைரக்டர் களஞ்சியம் மிரட்டல்!

15 ஏப்,2013 - 10:06 IST
எழுத்தின் அளவு:

கடந்த வாரத்தில் திடீரென்று காணாமல் போனார் நடிகை அஞ்சலி. அதையடுத்து அவரது சகோதரர் ரவிசங்கர் என்பவர் ஐதராபாத் போலீசில் அஞ்சலியை காணவில்லை என்று புகார் கொடுத்தார். இதற்கிடையே, தன்னை தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் இருவரும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைப்பதோடு, தனது சொத்துக்களையும் அபகரித்து விட்டதாக போனில் புகார் தெரிவித்த அஞ்சலி, அதன்காரணமாகவே மன உளச்சலால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று தெரிவித்தார். அதோடு எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் எனது சித்தியும், டைரக்டர் களஞ்சியமும்தான் காரணம் என்றும் தெரிவித்தார்.

அதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஐதராபாத் போலீசில் ஆஜரான அஞ்சலி தான் கடத்தப்படவில்லை என்றும், தனக்கு ஏற்பட்ட பிரசசினைகளையும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

ஆனால், தன் மீது சொத்து அபகரிப்பு, கொலை முயற்சி என தெரிவித்த அஞ்சலி மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் வழககுத் தொடர்ந்துள்ளார் டைரக்டர் களஞ்சியம். இதுபற்றி அஞ்சலியிடம் விசாரித்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதற்கிடையே தற்போது களஞ்சியம் இயக்கி நாயகனாக நடித்து வரும் ஊர்சுற்றும் புராணம் என்ற படத்திலும் அஞ்சலிதான் நாயகியாகநடித்து வருகிறார். இதுவரை 15 நாட்கள் அவர் படத்தில் நடித்துள்ள அஞ்சலி, வருகிற 24ம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக ஏற்கனவே கால்சீட் கொடுத்துள்ளாராம். ஆனால், இந்தபிரச்சினைகளுககுப்பிறகு இதுவரை படம் சம்பந்தமாக அஞச்லிதரப்பில் இருந்து களஞ்சியத்துக்கு எந்தவித தகவலும் இல்லையாம்.

அதனால் குறிப்பிட்ட நாளில் அஞ்சலி தனது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாவிட்டால் அவர் மீது, தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் போன்ற அமைப்புகளில் புகார் செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ள களஞ்சியம், ஆனால் எந்த பிரச்சினையும் செய்யாமல் அவர் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால், அவருடன் இணைந்து நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
சம்பளம் வாங்காமல்  நடித்த நயன்தாராசம்பளம் வாங்காமல் நடித்த நயன்தாரா பிரபுதேவாவின் கேர்ள் ப்ரண்டான அசின்! பிரபுதேவாவின் கேர்ள் ப்ரண்டான அசின்!


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sila Samayangalil
    • சில சமயங்களில்
    • நடிகர் : பிரகாஷ் ராஜ்
    • நடிகை : ஸ்ரேயா ரெட்டி
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
    Tamil New Film Ilami
    • இளமி
    • நடிகர் : யுவன்
    • நடிகை : அனு கிருஷ்ணாž
    • இயக்குனர் :ஜூலியன் பிரகாஷ்
    Tamil New Film pramem (telugu)
    • பிரேமம் (தெலுங்கு)
    • நடிகர் : நாக சைதன்யா
    • நடிகை : ஸ்ருதி ஹாசன் ,மடோனா செபாஸ்டியன்
    • இயக்குனர் :சண்டூ மொண்டேடி
    Tamil New Film Achcham enbathu madamayada

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in