Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ரஜினி, ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து கட்டாயம் பவர் இருப்பான்! சீனிவாசன் அதிரடி

14 ஏப், 2013 - 18:11 IST
எழுத்தின் அளவு:

இணையதளத்தை திறந்தால், இவர் இம்சையில்லாத இடமில்லை. "இளசுகளின் இம்சை அரசனாக திடீர் பதவி உயர்வு பெற்ற இவர், இந்த கடுமையான "பவர் கட்டிலும், "பவர் ஸ்டார் என்ற பட்டத்தை சுமந்து, புழுக்கத்தில் இருப்போரை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். "லத்திகாவில் தொடங்கிய இவரது ஹீரோ பயணம், "சிம்புக்கு நான் தாண்டா தொல்லை... ஆனந்த தொல்லை... என, இளம் நடிகர்களுக்கு, திரையில் சவால் விடும் அளவிற்கு தற்போது உச்சத்தில் கொண்டு போயுள்ளது.

அடுத்தடுத்து சர்ச்சைகள் வந்தாலும், இவரை மொய்க்கும் ரசிகர் கூட்டம் (எப்படி வந்தது எனக்கேட்கக்கூடாது) குறைந்தபாடில்லை. இனியும் தேவையில்லை "சஸ்பென்ஸ். "பெரியது ஈபிள் டவரு, கல்யாணத்துக்கு மொய் கவரு, இடியாது சீனா சுவரு, காரணம் எங்க பவரு... என, மொக்கையர்களின் துதிபாடலை பொருட்படுத்தாமல், அவர்களையும் சிரிக்க வைத்து மகிழும் சீனிவாசன், தன் "கலகல பேட்டியால், உங்களை கலகலப்பாக்க போகிறார் வாருங்கள்:

* நீங்க மதுரை பவராமே?


"நானும் மதுரைக்காரன் தாண்டா... (விஷால் டயலாக் பாணியில் கூறினார்). வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி தான் நம்ம ஏரியா. அப்பா, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். படித்தது சேதுபதி பள்ளி. 20 வயது வரை, மதுரையில் தான் குப்பை கொட்டினேன்.

* நான்கு வயசுக்கு முன்னாடி தான், மதுரையிலிருந்து கிளம்பினீங்களா?


ஹி...ஹி... ஹி...

* காமெடிக்கு போனதால, உங்க "பைட் பார்க்க முடியலைன்னு ரசிகர்கள் "பீல் பண்றாங்களே!

காமெடியைத் தான் மக்கள் இப்போ ரசிக்கிறாங்க. சமீபமா, காமெடி கதைகள் தான் "ஹிட் ஆகுது. நான் திரையில் வந்தாலே, என் ரசிகர்கள் ரசிப்பார்கள்.

* "சீனிவாசனின் அடுத்த பட(ல)ங்கள் என்ன?

நான் ஊறுகாய்... நீ சரக்கு, யா... யா...யா..., சும்மா நச்சுன்னு இருக்கு.

* கேட்கக் கூடாததை கேட்டுட்டேனா... ஏன் கோபப்படுறீங்க?

ஹலோ... சத்தியமா என் படத்தோட பேருங்க! எல்லாமே காமெடி "சப்ஜெக்ட். ஜூன் மாதத்திற்கு பிறகு "பவர் இல்லாத படமே இல்லை.

* அடுத்த படத்துலயாவது உங்க காதல் "சக்சஸ் ஆகுமா?

ரசிகர்கள் கேட்குறாங்க!  "நான் ஊறுகாய், நீ சரக்கு படத்தில் கேரளாவின் முன்னணி குத்தாட்ட நடிகை "ருக்கு தான் எனக்கு ஜோடி(கேரளாவில் எல்லாம் குத்தாட்டம் இருக்கா என்ன?) "ரொமான்ஸ்ல புகுந்து விளையாடியிருக்கோம். படம் வந்ததும், பாருங்க...

*"டக்குனு ஒரு ரியல் "பஞ்ச் அடிங்க...

"சினிமாவில் யாரும் நிரந்தரம் இல்லை. இப்போ எனக்கு மவுசு இருக்கு. நடிக்கும் வரை மேடை; முடிஞ்சதும்,கீழே இறங்கிடனும், ("பஞ்ச் கேட்டா காமெடி பண்றாரே).

* பவர் ஸ்டாருக்கு, சூப்பர் ஸ்டார் ஆசை ஏன்?

என் ரசிகர்கள் தான் ஆசைப்படுறாங்க(ஹி...ஹி...ஹி...) நான் என்ன செய்யுறது. காலத்தின் கட்டாயம் எதுவோ, அதுபடி
நடக்கட்டும்(நீங்களுமா....).

* நடிகர்களை வரிசைப்படுத்தினால், பவருக்கு எந்த இடம்?

ரஜினி, ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து, கட்டாயம் "பவர் இருப்பான். எனக்கு நிகர், நான் மட்டுமே. சந்தானம், என் தம்பி (இப்படித்தான் அவசரப்பட்டு வயசை உடைக்கிறதா...)

* சீனிவாசன் உங்க பேரு,  "பவர் ஸ்டார்ங்கிறது படிச்சு வாங்கிய பட்டமா?

(பளார்... பளார்... பளார்... ரியாக்ஷனுக்கு பின்) "லத்திகா வெற்றி விழாவில் பங்கேற்ற திருமாவளவன், என் ரசிகர் கூட்டத்தை கண்டு வியந்து, "பவர் ஸ்டார் பட்டம் சூட்டினார், என,பேசிக்கொண்டிருந்த போதே... "நாளைய ஜனாதிபதி பவர் ஸ்டார்... அமெரிக்க  அதிபர் பவர் ஸ்டார்... ஆஸி., பிரதமர் பவர் ஸ்டார்... என,  உரக்க ஒலித்து ரசிகர்களின் குரல் நோக்கி நகர்ந்தார் பவர்.

"தலைவா... நீ தான் தமிழ், உன்னை எதிர்த்தா டுமீல்... போன்ற வசன மழை பொழிந்தனர் சிலர். "தம்பி... நீங்க எல்லோரும் என் "மைண்ட்ல இருக்கீங்க... பெத்தவங்க தான் "பர்ஸ்ட், பவர் "நெக்ஸ்ட் என, சிரிக்காமல் சிரித்து அவர்களுக்கும், நமக்கும் விடை கொடுத்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in