இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கோடை என்றாலே வாட்டி எடுக்கும் வெயிலை சமாளிக்க குளிர் பிரதேசங்களைத் தேடி நடிகர்-நடிகைகள் ஓடுவது வழக்கம். என்னதான் வீட்டில் எந்நேரமும் அவர்கள் ஏசியிலேயே இருந்தாலும், ஒரு சேஞ்சுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வருவார்கள். அப்படித்தான் த்ரிஷாவும் வருசத்துக்கு ஒரு குளிர்பிரதேச நாட்டுக்கு சென்று கோடையை கொண்டாடி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
அதேபோல் இந்த ஆண்டும் எந்த நாட்டுக்கு சென்று வரலாம் என்று அவர் மூளையை கசக்கிக்கொண்டிருந்தாராம். ஆனால் அப்போது பார்த்து, ஜீவாவுடன் அவர் நடித்து வரும் என்றென்றும் புன்னகை என்ற படத்தில் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இருப்பதாக சொன்னார்களாம். இதனால் உற்சாகமடைந்த த்ரிஷா, தனது சொந்த செலவில் கோடை டூர் செல்வதை தவிர்த்து, இப்போது தயாரிப்பாளரின் செலவில் குளுகுளு டூர் செல்லவிருக்கிறார். அங்கு இடைவிடாத படப்பிடிப்பு நடைபெற்றாலும், ஓய்வு கிடைக்கும் நாட்களில் சில அருவி பிரதேசங்களுக்கு சென்று ஹாயாக நீராடவும் திட்டமிட்டுள்ளாராம் த்ரிஷா.