பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த படம் மங்காத்தா. இந்த படத்தில் தனது நிஜகெட்டப்பை மாற்றாமல், 40 வயது நரைமுடி கோலத்தில் நடித்திருந்தார் அஜீத். அதோடு, நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது என்று சொல்லிக்கொண்டு நெகடீவ் ரோலிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
அதேபாணியில் இப்போது சூதுகவ்வும் படத்தில் நடித்துள்ள விஜயசேதுபதியும் 40 வயதுக்காரராக நடித்துள்ளார். தலை மற்றும் மீசையில் ஆங்காங்கே நரை முடிகள் எட்டிப்பார்க்கும் கெட்டப்பில் நடிக்கிறார். மங்காத்தாவில் 500 கோடிக்கு குறி வைத்தார்கள் என்றால், விஜயசேதுபதி குரூப் 300 கோடிக்கு குறி வைப்பதுதான் சூதுகவ்வும் படக்கதையாம்.
அவரிடத்தில் இந்த கெட்டப் மங்காத்தா அஜீத்தை நினைவுபடுத்துவது போல் உள்ளதே? என்று கேட்டால், அஜீத் மாதிரியே நடிக்க வேண்டும் என்பதற்காக இந்த கெட்டப்புக்கு நான் மாறவில்லை. கதைக்காகவே என்னை மாற்றிக் கொண்டுள்ளேன். இந்த படம் மட்டுமின்றி, எந்த படமாக இருந்தாலும் கதைக்காக என்னை முழுசாக மாற்றிக்கொள்வேன் என்கிறார் விஜயசேதுபதி.