இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் 3டி படம் கோச்சடையான். கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிக்கப்பட்டு தற்பேது இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் தனது கேரக்டருக்கான டப்பிங் பேசி முடித்து விட்டார் ரஜினி. அதையடுத்து மற்ற நடிகர் நடிகைகளும் பேசினார்கள். தற்போது பின்னணி இசை கோர்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும், மே மாதம் 15 ந்தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோச்சடையான் படத்தில் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. ரஜினி கலந்து கொண்டு வெளியிடுகிறார்.
இப்படம் பற்றி டைரக்டர் செளந்தர்யா கூறுகையில், இப்படத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நேர்மையும், தெய்வீக குணமும் கொண்ட கோச்சடையான் தந்தை வேடம். ராணா என்ற மகன் வேடம் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பா வேடத்துக்கு ஷோபனாவும், மகன் வேடத்துக்கு தீபிகா படுகோனேவும் ஜோடியாக நடித்துள்ளனர் என்கிறார்.