Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் விக்ரமனின் கண்டுபிடிப்பு - புது முக நடிகர் ரெஜித்!

12 ஏப், 2013 - 14:16 IST
எழுத்தின் அளவு:

தனது முதல் படத்திற்கு புதுவசந்தம் என்று பெயர் வைத்த நேரமோ என்னவோ தமிழ் சினிமாவில் ஒரு புதுவசந்தமாகவே நுழைந்து இன்று மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் இயக்குனர் விக்ரமன். பல நடிக- நடிகைகளை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இன்று புகழின் உச்சியில் இருக்கும் நடிகர்ளுக்கு விகரமன் படங்கள் தாம் புகழின் ஏணிப்படியாக அமைந்தது என்றால் மிகையாகாது.

குடும்பப்பின்னணியில் சமூக நோக்கும் கலந்து வரும் அவரது பொழுதுபோக்குப் படைப்புகள் வயது வித்தியாசமின்றி அனைத்து ரசிகர்களாலும் கவரப்படுபவைகளாக இருக்கும்.

அந்த வரிசையில் தற்பொழுது முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து நினைத்தது யாரோ என்கிற படத்தை இயக்கிவருகிறார். கிட்டத்தட்ட 80% முடிவடைந்த நிலையில் உள்ள இந்தப் படத்தில் ரெஜித் என்கிற பொறியியல் பட்டதாரியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் விக்ரமன்.

இந்த படம் எனக்கு வாழ்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பும் ரெஜித், “ பொறியியல் படித்து முடித்து விட்டு சினிமா மீது இருந்த காதலால் சினிமாவிற்கு வந்த எனக்கு தமிழில் முதல் படமே விக்ரமன் சார் படமாக அமைந்தது பெரிய அதிர்ஷ்டம்… விக்ரமன் சார் இயக்கத்தில் நடிப்பது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது.. பழகுவதற்கு இனிமையானவர்.


ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் விக்ரமன் சாருக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமையும்… நினைத்தது யாரோ வெளியான பிறகு தமிழ் ரசிகர்கள் என்னை நிரந்தரமாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது… ” என்றார்.

அவர் சொல்லுவது சரிதான் போலும், நினைத்தது யாரோ வெளிவரும் முன்பே இரண்டு பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வந்திருக்கும் ரெஜித் எப்படிப் பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறார்.

ரெஜித்துக்குப் பிடித்த ஒரு தூண்டுதலாக இருக்கும் நடிகர் யார் தெரியுமா…? ரெஜித்துக்கும் தல அஜித்தானாம். 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
12 ஏப், 2013 - 16:25 Report Abuse
Angry ஜெய் விக்ரமனின் கண்டுபிடிப்பு - சீக்கிரமே தொலைஞ்சுருவ
Rate this:
raja - MUMBAI,இந்தியா
13 ஏப், 2013 - 00:06Report Abuse
rajaஏன் இந்த கோவம் ..... எதாவது முன் பகையா திரு. ஜெய் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in