Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாட்ஷாவாகிறார் நடிகர் விஜய்...!!

09 ஏப், 2013 - 15:00 IST
எழுத்தின் அளவு:

நடிகர் விஜய் பாட்ஷாவாக மாறப்போகிறார். ஆம்! பாட்ஷா படத்தின் ரீ-மேக்கில் நடிக்க இருக்கிறார்; அப்படின்னா ரஜினியின் பாட்ஷா ரீ-மேக்கா என்று நீங்கள் கேட்பது புரிகிறது; இது ரஜினியின் பாட்ஷா கிடையாது, ஜூனியர் என்.டி.ஆர்., நடித்த பாட்ஷா ஆகும். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., காஜல் அகர்வால் ஆகியோரது நடிப்பில் கடந்தவாரம் வெளியாகி இருக்கும் படம் பாட்ஷா. சீனு வைத்லா இயக்கியுள்ள இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகளவில் ரூ.24 கோடி வசூல் செய்து இருக்கிறது. தொடர்ந்தும் நல்ல வசூல் ஆகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கு பாட்ஷா படத்தின் ரீ-மேக் உரிமையை பி.வி.பி. நிறுவனம் வாங்கியுள்ளது. இதில், நடிகர் விஜய் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி பாட்ஷாவில் நடித்த காஜலே விஜய்யுடன் மூன்றாவது முறையாக ஜோடி போட இருப்பதாகவும், தலைவா படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தெலுங்கு பாட்ஷா படத்தில் அனைத்து விதமான கமர்ஷியல் அயிட்டங்களும் இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த சில ரீ-மேக் கமர்ஷியல் படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட்டாகியுள்ளதால், இப்படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

Krish - Madurai,இந்தியா
10 ஏப், 2013 - 14:07 Report Abuse
Krish பாட்ஷா படம் ரஜினி ஸ்டைலுக்காகவே ஓடிய படம். அந்த படத்தில் இன்னொரு நடிகரை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
Rate this:
iyappan - chennai,இந்தியா
30 மே, 2013 - 10:23Report Abuse
iyappanஆமாம்...
Rate this:
Thamizh - Bangalore,இந்தியா
10 ஏப், 2013 - 08:26 Report Abuse
Thamizh ஏன்டா இந்த மானகெட்ட பொழப்பு ?
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
10 ஏப், 2013 - 10:46Report Abuse
saravanakumarதமிழ் நீயே மாமா வேலை பார்க்கிற...
Rate this:
vijayadhiraaj - chennai,இந்தியா
10 ஏப், 2013 - 07:40 Report Abuse
vijayadhiraaj பல்லு இருகிறவன் பக்கோடா தின்கிறான். இங்க கமெண்ட் கொடுகிரவங்க எல்லாம் நெகடிவ் கம்மேன்ட்டா கொடுகிறத பார்த்தா எல்லோருக்கும் பொறாமை இருப்பதுது தெரிகிறது. விஜயை கமலோடு ஒப்பிட்டால் எதிர்க்கலாம். ரஜினியோடு ஒப்பிடுவதில் ஒன்றும் தவிறில்லை. ரஜினி ஒன்றும் நடிக்கதெரிந்த மனிதரில்லை. அது அவருக்கே தெரியும்
Rate this:
iyappan - chennai,இந்தியா
30 மே, 2013 - 10:27Report Abuse
iyappanதப்பு...
Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
10 ஏப், 2013 - 01:57 Report Abuse
விருமாண்டி உன்னோட அரகொர டான்ஸ் வச்சி காலத்த ஓட்டுற ..நீயெல்லாம் ஒரு ஆளு உனக்கு....
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
10 ஏப், 2013 - 10:48Report Abuse
saravanakumarவிருமாண்டி நீ என்ன கலெக்டர் வேலைய பார்க்கிற நீ ஒரு ஆளுன்னு கமெண்ட் பண்ணற...
Rate this:
Krish - Madurai,இந்தியா
10 ஏப், 2013 - 12:32Report Abuse
Krishசரவணகுமார் அவர்களே, கமெண்ட் பண்ணுவதற்கு கலெக்டர் வேலை பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பிரதமர்,ஜனாதிபதி போன்றோரையே விமர்சிக்கும் உரிமை உள்ள பொது கூத்தாடிகளை விமர்சிப்பதில் என்ன தவறு உள்ளது?...
Rate this:
Kannaathaal - ulunthoorpettai,எரிட்ரியா
10 ஏப், 2013 - 01:42 Report Abuse
Kannaathaal எல்லாம் கலி காலம் படித்து விட்டு எவ்வளவோ திறமையான இளைஞர்களுக்கு ஒரு சரியான வேலை இந்த நாட்டில் கிடைபதில்லை. ஆனால் சினிமா என்ற ஒரு துறை மட்டும் கோடிகளில் புரள்கிறது. ஒரு நாட்டில் விவசாயம் (நம் நீர் நிலைகள் அனைத்தும் வற்றிவருகின்றன), தொழில் துறை (மின்சாரம் இல்லாமை), சுகாதாரம் (போலி மருந்துகள் போலி டாக்டர்கள்), கல்வி (ஊழல்), பாதுகாப்பு (மீனவர் மீது அந்நிய நாட்டின் தாக்குதல்), போன்ற அடிப்படை தூண்கள் ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் வேளையில், நாம் தயாரிக்கும் படங்களும் உருவாக்கும் நடிகர்களுமா நம்மை உலக அரங்கில் முன்னிலைக்கு எடுத்து செல்ல போகிறது? சிந்திப்பார்கள நம் மக்கள் இல்லை கிரிக்கெட்டுக்கும் சினிமாவுக்கும் நம் எதிர்காலத்தை பலி கொடுத்துவிடுவோமா?
Rate this:
Purushothaman Mani - Kuala Lumpur,மலேஷியா
10 ஏப், 2013 - 06:17Report Abuse
Purushothaman Maniithuthan nadakka poguthunnu ninaikkiren...
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in