ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"துப்பாக்கியைத் தொடர்ந்து, "தலைவா படத்தில் நடித்து வருகிறார், விஜய். துவக்கத்தில், இந்த படத்துக்கு, "தலைவன் என்று தான் தலைப்பு வைத்திருந்தனர். இதே பெயரில் ஏற்கனவே, இன்னொரு படம் வளர்ந்து வந்ததால், "தலைவா என்று தலைப்பை திருத்தம் செய்தனர். அதோடு, "இந்த மாதிரியான தலைப்பு தான், படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றாராம், இயக்குனர்.
இதையடுத்து, அரசியல் சார்ந்த கதை என்பதால் தான், இந்த மாதிரி தலைப்பு வைத்துள்ளனர் என்று செய்தி பரவியதோடு, கதர் சட்டை அணிந்து விஜய் நடிப்பதாகவும் கூறப்பட்டது.ஆனால், டைரக்டர் விஜயிடம் இதுபற்றி கேட்டால், "இது, அரசியல் படமல்ல; எல்லோராலும், "தலைவா என்று அடையாளப் படுத்தப்படும் ஒருவர், அந்த இடத்துக்கு எப்படி வந்தார் என்பதுதான் கதை. வேறெதுவுமில்லை என்கிறார்.