‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சேட்டை படம் வெளியாவதற்கு முன்புவரை ஹன்சிகாவும், ஆர்யாவும்தான் முத்தக்காட்சிகளில் நடித்திருப்பதாக ஹாட் செய்திகள் பரவியிருந்தன. ஆனால் படம் திரைக்கு வந்தபோதுதான், அஞ்சலியும், ஆர்யாவும்தான் அந்த முத்தச்சேட்டைக் காட்சிகளில நடித்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதைப்பார்த்து விட்டு, இதுவரை அஞ்சலி முத்தக்காட்சி என்றாலே கத்தரி போட்டு விடுவார் என்று தாமாக முடிவு செய்திருந்த இயக்குனர்கள் இப்போது தப்புக்கணக்கு போட்டுவிட்டோமே என்று அஞ்சலிக்காக கப்ளிங் முத்தக்காட்சிகளை கதைக்குள் திணித்து வருகின்றனர். இதுமாதிரி காட்சிகள் கதையில் இருக்கிறது என்று அவர்கள் முன்பே அஞ்சலியிடம் சொல்லாதபோதும், எதுவும சொல்ல மாட்டார் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.
ஆனால் இந்த சேதி அஞ்சலிக்கு பட்டும் படாமலும தெரிந்தபோது, டைரக்டர்களே ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். அதோடு, குடும்ப நடிகை என்கிற வட்டத்தை விட்டு கவர்ச்சி நடிகை என்ற வட்டத்துக்குள்ளும் வந்தாயிற்று. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்போதுபோல், டைரக்டர்கள் விரும்பினால் நான் என்ன செய்ய முடியும். முத்தக்காட்சியோ, குளியல் காட்சியோ எதற்கும் நான் தயார் என்று பச்சைக்கொடிக்காட்டி வருகிறார். அதேசமயம், இந்த அதிர்வேட்டு நடிப்புக்கு பிறகு காதும் காதும் வைத்த மாதிரி தனது படக்கூலியினையும் கோடிகளாக்கியிருக்கிறாராம் அஞ்சலி.