ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமா ஹீரோயின்களை பொறுத்தவரை, ஹீரோயின் கேரக்டரை தவிர, வேறு எந்த கேரக்டரிலும் நடிக்க மாட்டார்கள். அதையும் மீறி, ஏதாவது சிறிய கேரக்டர்களில் நடித்தால், அதன்பின், அந்த மாதிரி வேடங்களிலேயே நடிக்க அழைப்பர் என்ற அச்சம் தான், இதற்கு காரணம். ஆனால், "வாகை சூடவா ஹீரோயின், இனியாவுக்கு, இதில் நம்பிக்கை இல்லையாம். சில படங்களில், ஹீரோயினாக நடிக்கும் அவர், "நினைத்தது யாரோ, ரெண்டாவது படம் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார். "சிறிய வேடங்களில் நடித்தால், கதாநாயகி அந்தஸ்து போய்விடுமே என்று, இனியாவிடம் கேட்டால், அதற்கு, பதிலை ரெடியாக வைத்திருக்கிறார். "என்னை, கதாநாயகி என்று ஒரு போதும் நான் நினைத்துக் கொள்வதில்லை. கதையில், நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அவ்வளவு தான். மலையாளத்தில் எல்லாவிதமான வேடங்களிலும் நடிகைகள் நடிப்பது வழக்கம். அந்த பாணியில் தான் தமிழில் நடித்து வருகிறேன் என்கிறார், இனியா.