சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
காஜல் அகர்வால், தமிழில், தெலுங்கில், முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். "ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில், காஜலுக்கு, குடும்ப பாங்கான கேரக்டராம். கிராமத்து பின்னணியில் தயாரான படம் என்பதால், காஜலுக்கு, இதில், முற்றிலும் வித்தியாசமான வேடமாம். அது, மட்டுமல்லாமல், இந்த படத்தில், அவருக்கு வசனங்களும் அதிகம்.இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில், பொள்ளாச்சி, கும்பகோணம் ஆகிய ஊர்களில் நடந்தபோது, நீளமான வசனங்களை பேச வேண்டியிருந்ததாம். இதனால், முந்தைய நாளே, வசனங்களை கேட்டு வாங்கி, மனப்பாடம் செய்த காஜல், அடுத்த நாள், படப் பிடிப்பின்போது, தமிழில் வெளுத்து வாங்கினாராம். காஜலின் ஆர்வத்தை பார்த்து, ஆச்சர்யமடைந்த படக் குழுவினர், அவரை பாராட்டி தள்ளி விட்டனர். "முன்னணி இடத்தை தக்க வைக்க வேண்டுமானால், இதுபோல், ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டியது அவசியம் என்கிறாராம், காஜல்.