Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவிற்கு புதிய முயற்சி! அரட்டை நட்சத்திரங்களுக்கு ஆப்பு...!!

03 ஏப், 2013 - 13:59 IST
எழுத்தின் அளவு:

ஷூட்டிங் ஸ்பாட்டில் வெட்டியாக அரட்டை அடிக்கும் திரைநட்சத்திரங்களுக்கு ஆப்பு வைக்க வருகிறது ஒரு புதிய நடைமுறை. பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் எனும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளார் இயக்குனராக அவதரித்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன். இவர் இயக்கும் முதல்படம் யான். ஜீவா ஹீரோவாகவும், துளசி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷ்ன் ப்ளஸ் ரொமாண்டிக் கலந்த கதையாக இப்படத்தை இயக்கி வருகிறார் ரவி கே.சந்திரன். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஹாரிஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தயாரிப்பாளர் எல்‌ரெட் குமார், நம்மூரில் பிறந்து வடமாநிலம் வரை தனது ஒளிப்பதிவால் அசத்தியவர் ரவி கே.சந்திரன். அவர் இயக்கும் முதல்படமான யான்-ஐ எங்கள் நிறுவனம் தயாரிப்பது எங்களுக்கு பெருமை என்றார். மேலும் பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் எனும் புதிய நடைமுறையை ரவி கே சந்திரன் கொண்டு வந்துள்ளார். உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம். ஹாலிவுட் படமான ஸ்கைபால் படத்தை வெறும் 40 நாட்களில் முடிக்கிறார்கள், ஆனால் தமிழ்படங்கள் கிட்டத்தட்ட 80நாள்-90நாள், ஓ‌ராண்டு, இரண்டாண்டு என்று இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். ரவி கே.சந்திரன் கொண்டுவந்துள்ள இந்த முயற்சியால், படத்தின் பாதி செலவு குறைந்து இருப்பதாகவும், இந்த சிஸ்டத்தை எனது பட தயாரிப்புகளில் மட்டுமல்லாது எல்லா தயாரிப்பாளர்களும் இதை பின்பற்ற சொல்லி வலியுறுத்தியும் வருகிறேன் என்றார்.

பர்ஸ்ட் எடிட் சிஸ்டம்; அப்படின்னா என்ன...? ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் 20-25 பேர் கையில் வாக்கி டாக்கியுடன் உலா வருவார்கள். எப்பேர்பட்ட ஹீரோ, ஹீரோயின் என்றாலும் இவர்களிடம் சொல்லிவிட்டு தான் எங்கும் போக வேண்டும், ஏன் டாய்லெட் போக வேண்டும் என்றால் கூட இவர்களிடம் சொல்லிவிட்டு தான் போகணும், இவ்வளவு மணிநேரத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் ஷாட்டுக்கு ரெடியாகிவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். நடிகர்-நடிகையர்களை கண்காணிக்க எப்போதும் ஆள் போட்டிருப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் ஹீரோ, ஹ‌ீரோயின்கள் ஹாயாக உட்கார்ந்து பேச முடியாது, அரட்டை அடிக்க முடியாது. கேரவனில் போய் ரொம்பநேரம் ஓய்வெடுக்க முடியாது. இதுபோன்று கண்காணிப்பதால் சொன்ன தேதிக்கு முன்பாக படத்தை வேகமாக எடுத்து முடித்து விடலாம், அதேப்போல் படத்தின் செலவும் பாதியளவு குறைக்கப்படும்.

வரவேற்கத்தக்க விஷயம் தான்...!!

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

திராவிடன் - Madurai,இந்தியா
04 ஏப், 2013 - 11:03 Report Abuse
திராவிடன்  இவரு இப்படி பண்ணினால் அடுத்து இவரு எடுக்குற படத்துல இவரு ஹீரோவாகவும் இவரு பெண்டாட்டி ஹீரோயினாகவும்தான் நடிக்கமுடியும்...ராஜ்குமார் தேவயாணி மாதிரி...ஹாஹாஹா...
Rate this:
Mudhalvan - Hyderabad,இந்தியா
04 ஏப், 2013 - 07:36 Report Abuse
Mudhalvan இது என்ன ஸ்கூல் ah ? . நடிகர்-நடிகையர்களை கண்காணிக்க ? அவன் நடிக்கிறான் பணம் சம்பாதிகறான் , உங்களுக்கு எங்க எரியுது ??? படம் பாக்கறவங்கள சொல்லணும் ? அவங்க ஏன் நாட்டை காப்பத்தனும்? அவங்க என்ன CM ah ? இல்ல PM ah ? ஓட்டு வாங்கிட்டு நாட்டை கெடுகரவங்கல திட்டுங்க பா... அத விட்டுட்டு நடிகர்கள ஏன் திட்டுறீங்க ?
Rate this:
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
04 ஏப், 2013 - 05:16 Report Abuse
என்னுயிர்தமிழகமே இனி தமிழகத்தில் இருந்து படம் இல்லாமல் கேரளா திரும்பும் மக்களுக்கு இந்திய அரசு உதவி இணக்கமாய் இருந்து உதவி புரியும் என்று கேரளைந்திய அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்
Rate this:
Dumeel Kandasamy - dacca,வங்கதேசம்
04 ஏப், 2013 - 00:30 Report Abuse
Dumeel Kandasamy நீங்கள் படம் படம் பார்ப்பதை நிறுத்தினால் அவர்கள் சம்பளம் தன்னால் குறைந்து விடும் செய்வீர்களா? ( நான் படம் பார்ப்பதை நிறுத்து 16 வருடங்கள் ஆகின்றன ) நாம தான் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணுற கோஷ்டி ஆச்சே அப்புறம் அவனுங்க சம்பளம் கோடியில புரளாம வேற எப்படி இருக்குமாம்?
Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
04 ஏப், 2013 - 00:10 Report Abuse
விருமாண்டி கிருஷ் ஆறுமுகம் சொன்ன கருத்து சூப்பர்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in