Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவிற்கு புதிய முயற்சி! அரட்டை நட்சத்திரங்களுக்கு ஆப்பு...!!

03 ஏப்,2013 - 13:59 IST
எழுத்தின் அளவு:

ஷூட்டிங் ஸ்பாட்டில் வெட்டியாக அரட்டை அடிக்கும் திரைநட்சத்திரங்களுக்கு ஆப்பு வைக்க வருகிறது ஒரு புதிய நடைமுறை. பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் எனும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளார் இயக்குனராக அவதரித்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன். இவர் இயக்கும் முதல்படம் யான். ஜீவா ஹீரோவாகவும், துளசி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷ்ன் ப்ளஸ் ரொமாண்டிக் கலந்த கதையாக இப்படத்தை இயக்கி வருகிறார் ரவி கே.சந்திரன். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஹாரிஸ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தயாரிப்பாளர் எல்‌ரெட் குமார், நம்மூரில் பிறந்து வடமாநிலம் வரை தனது ஒளிப்பதிவால் அசத்தியவர் ரவி கே.சந்திரன். அவர் இயக்கும் முதல்படமான யான்-ஐ எங்கள் நிறுவனம் தயாரிப்பது எங்களுக்கு பெருமை என்றார். மேலும் பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் எனும் புதிய நடைமுறையை ரவி கே சந்திரன் கொண்டு வந்துள்ளார். உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம். ஹாலிவுட் படமான ஸ்கைபால் படத்தை வெறும் 40 நாட்களில் முடிக்கிறார்கள், ஆனால் தமிழ்படங்கள் கிட்டத்தட்ட 80நாள்-90நாள், ஓ‌ராண்டு, இரண்டாண்டு என்று இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். ரவி கே.சந்திரன் கொண்டுவந்துள்ள இந்த முயற்சியால், படத்தின் பாதி செலவு குறைந்து இருப்பதாகவும், இந்த சிஸ்டத்தை எனது பட தயாரிப்புகளில் மட்டுமல்லாது எல்லா தயாரிப்பாளர்களும் இதை பின்பற்ற சொல்லி வலியுறுத்தியும் வருகிறேன் என்றார்.

பர்ஸ்ட் எடிட் சிஸ்டம்; அப்படின்னா என்ன...? ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் 20-25 பேர் கையில் வாக்கி டாக்கியுடன் உலா வருவார்கள். எப்பேர்பட்ட ஹீரோ, ஹீரோயின் என்றாலும் இவர்களிடம் சொல்லிவிட்டு தான் எங்கும் போக வேண்டும், ஏன் டாய்லெட் போக வேண்டும் என்றால் கூட இவர்களிடம் சொல்லிவிட்டு தான் போகணும், இவ்வளவு மணிநேரத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் ஷாட்டுக்கு ரெடியாகிவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். நடிகர்-நடிகையர்களை கண்காணிக்க எப்போதும் ஆள் போட்டிருப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் ஹீரோ, ஹ‌ீரோயின்கள் ஹாயாக உட்கார்ந்து பேச முடியாது, அரட்டை அடிக்க முடியாது. கேரவனில் போய் ரொம்பநேரம் ஓய்வெடுக்க முடியாது. இதுபோன்று கண்காணிப்பதால் சொன்ன தேதிக்கு முன்பாக படத்தை வேகமாக எடுத்து முடித்து விடலாம், அதேப்போல் படத்தின் செலவும் பாதியளவு குறைக்கப்படும்.

வரவேற்கத்தக்க விஷயம் தான்...!!

Advertisement
பாலாவின் பட்டறைக்குள் செல்ல துடிக்கும் விக்ரம் பிரபு!பாலாவின் பட்டறைக்குள் செல்ல ... சிங்கம்-2வைத் தொடர்ந்து கார்த்தியை இயக்குகிறார் டைரக்டர் ஹரி! சிங்கம்-2வைத் தொடர்ந்து கார்த்தியை ...

வாசகர் கருத்து

திராவிடன் - Madurai,இந்தியா
04 ஏப்,2013 - 11:03
திராவிடன் இவரு இப்படி பண்ணினால் அடுத்து இவரு எடுக்குற படத்துல இவரு ஹீரோவாகவும் இவரு பெண்டாட்டி ஹீரோயினாகவும்தான் நடிக்கமுடியும்...ராஜ்குமார் தேவயாணி மாதிரி...ஹாஹாஹா...
Mudhalvan - Hyderabad,இந்தியா
04 ஏப்,2013 - 07:36
Mudhalvan இது என்ன ஸ்கூல் ah ? . நடிகர்-நடிகையர்களை கண்காணிக்க ? அவன் நடிக்கிறான் பணம் சம்பாதிகறான் , உங்களுக்கு எங்க எரியுது ??? படம் பாக்கறவங்கள சொல்லணும் ? அவங்க ஏன் நாட்டை காப்பத்தனும்? அவங்க என்ன CM ah ? இல்ல PM ah ? ஓட்டு வாங்கிட்டு நாட்டை கெடுகரவங்கல திட்டுங்க பா... அத விட்டுட்டு நடிகர்கள ஏன் திட்டுறீங்க ?
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
04 ஏப்,2013 - 05:16
என்னுயிர்தமிழகமே இனி தமிழகத்தில் இருந்து படம் இல்லாமல் கேரளா திரும்பும் மக்களுக்கு இந்திய அரசு உதவி இணக்கமாய் இருந்து உதவி புரியும் என்று கேரளைந்திய அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்
Dumeel Kandasamy - dacca,வங்கதேசம்
04 ஏப்,2013 - 00:30
Dumeel Kandasamy நீங்கள் படம் படம் பார்ப்பதை நிறுத்தினால் அவர்கள் சம்பளம் தன்னால் குறைந்து விடும் செய்வீர்களா? ( நான் படம் பார்ப்பதை நிறுத்து 16 வருடங்கள் ஆகின்றன ) நாம தான் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணுற கோஷ்டி ஆச்சே அப்புறம் அவனுங்க சம்பளம் கோடியில புரளாம வேற எப்படி இருக்குமாம்?
விருமாண்டி - மதுரை,இந்தியா
04 ஏப்,2013 - 00:10
விருமாண்டி கிருஷ் ஆறுமுகம் சொன்ன கருத்து சூப்பர்
Arumugam - sankarankovil,இந்தியா
03 ஏப்,2013 - 19:36
Arumugam விருமாண்டி , கிரீஸ் அவங்க சம்பளத குறைக்க சொல்ல நாம யாரு .. அவங்க சம்பளம் அதிகமானது தான் ...நாம் அவர்கள் படங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுப்பதனால் தானே இவ்வளவு சம்பளம் ...எல்லோருடைய படங்களையும் படங்களாக பாருங்கள் ..
YES SIR - Thennakam,இந்தியா
03 ஏப்,2013 - 19:36
YES SIR முழக்க சாம்பதி்க்கிறதை என்ன பண்றாங்க..
YES SIR - Thennakam,இந்தியா
03 ஏப்,2013 - 18:56
YES SIR koadiyila puraluranga
kopalarajan - oman,ஓமன்
03 ஏப்,2013 - 18:14
kopalarajan வரவேற்கிறோம்
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03 ஏப்,2013 - 17:25
Susil நம்மூர் கதாநாயகர்கள் வானத்தில் இருந்து வந்தவர்களாயிற்றே , அவர்களுக்கு இதல்லாம் ஒத்து வருமா ?
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப்,2013 - 16:58
S.RAJA எந்த தொழிலை எடுத்தாலும் .பார்க்கிற இடத்துல கட்டுப்பாடு இருக்கும். இவங்க மட்டும் அவுத்து விட்ட மாடு மாதி்ரி அலையிறது' நாம ஆயுசு முழக்க சாம்பதி்க்கிறதை .இவன்ங்க ஒரே படத்துல சாம்பதி்ச்சு .வி ஐ பி வேற ஆகியிறது"
விருமாண்டி - மதுரை,இந்தியா
03 ஏப்,2013 - 14:38
விருமாண்டி நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் ..நம் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத பணத்தை ஒரு படத்திலேயே சம்பாதித்து வாழ்க்கையில செட்டில் ஆயிடுரானுங்க ..
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Drishyam
  Tamil New Film Guddu Rangeela
  Tamil New Film Second Hand Husband
  Tamil New Film Seeni
  • சீனி
  • நடிகர் : ,சஞ்சீவி
  • நடிகை : ஓவியா
  • இயக்குனர் : ,ராஜதுரை

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in