புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ஐதராபாத் அருகே உள்ள, சில்கூர் என்ற கிராமத்தில், மிக பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, பாலாஜி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்து, மனம் உருக பிரார்த்தித்து, கோவிலை, 108 முறை சுற்றினால், வேண்டியது பலிக்கும் என்பது, நம்பிக்கை.இதனால், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வி.ஐ.பி.,க்களின் வருகைக்கும் பஞ்சம் இல்லை. லேட்டஸ்டாக இந்த கோவிலுக்கு வந்த, வி.ஐ.பி., யார் தெரியுமா? ஸ்ருதி ஹாசன் தான். சமீபத்தில், இந்த கோவிலுக்கு வந்த அவர், மனம் உருக வேண்டியதுடன் மட்டுமல்லாமல், கோவிலை, 108 முறை சுற்றி வந்தாராம். ஸ்ருதியின் வேண்டுதல் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக, தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றன, டோலிவுட் வட்டாரங்கள்.