Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்வாதியை பீல் பண்ண வைத்த இயக்குனர்கள்!

02 ஏப், 2013 - 18:04 IST
எழுத்தின் அளவு:

தமிழில் சசிகுமார் நடித்த சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தவர் ஸ்வாதி. அந்த படத்தில் சாதாரண பெண்ணாக அந்த கதாபாத்திரமாகவே மாறி இயல்பாக நடித்திருந்தார் அவர். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனாலும் அதையடுத்து ஸ்வாதிக்கு புதிய பட வாய்ப்புகள் இல்லை. அதனால் அதையடுத்து சமுத்திரகனி இயக்கத்தில் தான் நடித்த போராளி படத்திலும் ஸ்வாதிக்கு சான்ஸ் கொடுத்தார் சசிகுமார். இரண்டு படங்களிலுமே நல்ல நடிகையாக வலம் வந்த ஸ்வாதியை இப்போதும் கோலிவுட் ஆதரிக்கவில்லை.

அதனால், மீண்டும் ஆந்திராவுக்கே சென்று விட்டார். ஆனால் அங்கு அதிகப்படியான படங்களில் நடித்து விட்டார் அவர். என்றபோதும், அவரது சம்பளம் மட்டும் இன்னமும் சில லட்சங்களைகூட தாண்ட மறுக்கிறதாம். ஓரிரு படத்தில் நடித்த நடிகைகளெல்லாம் பந்தாவாக சொந்த காரில் ஸ்பாட்டுக்கு வந்து இறங்கும்போது ஸ்வாதி மட்டும், கம்பெனி காரில்தான் வந்து இறங்குகிறாராம. இதைபற்றி ஸ்வாதி கூறுகையில், எனக்கும் எல்லோரையும்போல் கார், பங்களா என்று வசதியாக வாழ ஆசையாகத்தான் உள்ளது. ஆனால், என்னை புக் பண்ணும் கம்பெனிகள் சில லட்சங்களை மட்டுமே சம்பளம் பேசுகிறார்கள். ஆனால் அதில்கூட பாதிக்கு மேல் தர மறுக்கிறார்கள். அதனால் என்னால் இன்னும் ஒரு பங்களாகூட எனது சம்பளத்தில் வாங்க முடியவில்லை.

மேலும், அதிரடி நடிகையாக உருவெடுக்க நான் ரெடியாக இருந்தாலும் டைரக்டர்கள் அந்தமாதிரி வேடம் தர மறுக்கிறார்கள். உனது தோற்றம் சாதாரணமாகத்தான் உள்ளது. அதோடு உடல்கட்டிலும் கிளாமர் இல்லை. அதனால், உன்னை வைத்து விஷப்பரீட்சை எடுக்க நாங்கள் தயாராக இல்லை என்கிறார்கள் என்று தனது நிலையை சொல்லி பீல் பண்ணுகிறார் ஸ்வாதி.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

mk.manivannan - al khor,கத்தார்
02 ஏப், 2013 - 19:43 Report Abuse
mk.manivannan நல்ல நடிகை , சுவாதிகிட்ட பிடிச்சதே அவங்க தேத்தி பல்லு தான். இதுவே வேறுயார இருந்தாலும் கிண்டல் பண்ணியிருப்பேன் . குட் லாக்.
Rate this:
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
02 ஏப், 2013 - 18:32 Report Abuse
S.RAJA கண்ணால நடிச்சி எனிய .ரசிகன்னுக்கு உறிச்ச பழம்ல்லா பிடிக்கும்\
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in