பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ரஜினி, விஜய் ஆகியோரது படங்களில் ஒருபாடலுக்கு ஆடியுள்ள நடிகை நயன்தாரா, இப்போது தனுஷ் தயாரிக்கும் எதிர்நீச்சல் படத்தில், தனுஷ் உடன் இணைந்து ஒரு ஆட்டம் போட்டு இருக்கிறார். நடிகர் தனுஷ் தயாரிப்பாளராக அவதரித்துள்ள படம் எதிர்நீச்சல். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ப்ரியா ஆனந்த் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். துரை செந்தில் இயக்கியுள்ளார். கொலவெறி அனிரூத் இசையமைத்துள்ளார். வாலி, தாமரை, மதன் கார்க்கி ஆகியோருடன் சேர்ந்து இப்படத்திற்கு தனுஷூம் பாடல் வரிகள் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டமும் போட்டுள்ளார் தனுஷ். கூடவே தனுஷூடன் சேர்ந்து நயன்தாராவும் ஆடியிருக்கிறார். சத்தியமா நீ எனக்கு தேவையில்லை... என்று தொடங்கும் பாடலுக்கு தனுஷூம், நயன்தாராவும் அசத்தலாக ஆட்டம் போட்டுள்ளனர். இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.