Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்ருதிஹாசன்...!

02 ஏப், 2013 - 10:52 IST
எழுத்தின் அளவு:

 தனது அப்பா கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை, நடிகை ஸ்ருதிஹாசன் தவறவிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதிஹாசன். லக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அவதரித்தார். ஆனால் அந்த படம் அவருக்கு லக்காக அமையவில்லை. பின்னர் தெலுங்கில் ஒரு படம் நடித்தார், அதுவும் சரியாக போகவில்‌லை. தொடர்ந்து தமிழில் சூர்யாவுடன் 7ம் அறிவு மற்றும் தனுஷ் உடன் 3 படங்களில் நடித்த ஸ்ருதிக்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்தது. பின்னர் தெலுங்கில் அவர் நடித்த கப்பார் சிங் மாபெரும் வெற்றி பெற முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது 6 படங்களில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனே இயக்கும் பிட்டர் சாக்லேட் என்ற படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தபடத்தில் தான் நடிக்கவில்லை என்று ஸ்ருதி கூறியுள்ளார். தனக்கு படம் பிடிக்கவில்லை என்பதால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லையாம், மாறாக தற்போது அவர் நிறைய படங்களில் நடிப்பதால் தன்னிடம் கால்ஷீட் இல்லை என்பதால் இப்படத்தை மறுத்து இருக்கிறார்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. அப்பா படத்தில் நடிக்காதது கவலையாகத்தான் இருக்கிறது. காரணம் ‌என்னிடம் கால்ஷீட் இல்லை, அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கமலின், உன்னைப்போல் ஒருவன் படத்தில், நடிகை ஸ்ருதி இசையமைப்பாளராகவும், ஒருபாட்டில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

itashokkumar - Trichy,இந்தியா
03 ஏப், 2013 - 08:52 Report Abuse
itashokkumar "3" படத்திலேயே நன்றாக நடித்திருந்தார் சகிலாவே அரண்டுட்டங்கலமுள்ள.
Rate this:
பாரதப்பிரியன் - அல்கோபர்,சவுதி அரேபியா
03 ஏப், 2013 - 00:53 Report Abuse
பாரதப்பிரியன் அப்பாவப்பத்தி நல்லா தெரிஞ்ச பொண்ணு. அதுதான் ஒதுங்கிடுச்சு. புதுமை அது இதுன்னு சொல்லி வாய்க்கு ப்ளாஸ்டர் போடவச்சுட்டார்னா........................................
Rate this:
பாரதப்பிரியன் - அல்கோபர்,சவுதி அரேபியா
02 ஏப், 2013 - 22:46 Report Abuse
பாரதப்பிரியன் அப்பாவப்பத்தி நல்லா தெரிஞ்ச பொண்ணு. அதுதான் ஒதுங்கிடுச்சு. புதுமை அது இதுன்னு சொல்லி வாய்க்கு ப்ளாஸ்டர் போடவச்சுட்டார்னா??????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in