Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அங்கிள்ன்னு சொல்லாதே...! துளசியிடம் ஜீவா வேண்டுகோள்!!

01 ஏப், 2013 - 12:55 IST
எழுத்தின் அளவு:

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் முதன்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் "யான். இப்படத்தில் ஹீரோவாக ஜீவாவும், ஹீரோயினாக கடல் துளசியும் நடிக்கின்றனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய படத்தின் டைரக்டர் ரவி.கே.சந்திரன், யான் படத்தின் கதை முழுக்க முழுக்க அன்றாடம் நாம் செய்தித்தாள்களில் பார்க்கும் செய்திகள் படத்தின் கதை. இப்படத்தில் நடிக்க, நடிகை தேடிய போது, டைரக்டர் மணிரத்னம் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் தான் துளசியை சிபாரிசு செய்தனர். அவர்கள் கூறியதை தொடர்ந்து துளசியை, ஜீவாவுக்கு ஜோடியாக்கினேன். அவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.

படத்தின் ஹீரோ ஜீவா பேசும்போது, இந்த படத்தில் துளசி தான் ஹீரோயின் என்று தெரிந்ததும், அவரிடம் நான் போட்ட முதல் கண்டிஷன், என்னை அங்கிள் என்று அழைக்க கூடாது என்பது தான். காரணம், என் வயதில் பாதி வயது தான் துளசிக்கு. வயதில் தான் பாதி, ஆனால் நடிப்பு என்று வந்து விட்டால் என்னை மிஞ்சும் அளவுக்கு நடிக்கிறார். அங்கிள் என்று நான் சொல்லக்கூடாது என்றதும், துளசி என்னை ஜீவா ஜி என்று அழைத்தார், இதற்கு நீ பேசாமல் என்னை அங்கிள் என்று அழைத்திருக்கலாம் என்றேன். மேலும் அக்கா-தங்கை இருவருடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, கார்த்திகாவிடம் நடிப்பு, டான்ஸ் என்று எல்லாமும் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் கலகல என்று இருப்பார். அவர் ஒரு இண்டர்நேஷனல் நடிகை. துளசியை பொறுத்தமட்டில் நம்மூரு நடிகை என்று தான் சொல்ல வேண்டும். அவர் மணிரத்னத்தின் பள்ளியில் இருந்து வந்தால் நடிப்பதற்கு முன்பு தன்னை தயார்படுத்தி தான் நடிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vaal Payyan - Chennai,இந்தியா
04 ஏப், 2013 - 11:20 Report Abuse
Vaal Payyan ஜீவா நீங்கள் மீண்டும் தமிழ் எம் எ .. ஈ மாதிரி படங்கள் நடிக்க வேண்டும் .. கமர்சியல் குப்பையில் சிக்கி தவிக்க வேண்டாம்
Rate this:
E Sreekanth - singapur,சிங்கப்பூர்
08 ஜூன், 2013 - 09:21Report Abuse
E Sreekanth அவனுக்கு மார்க்கெட் போகனுமா?...
Rate this:
vijay - Manama,பஹ்ரைன்
08 ஜூன், 2013 - 16:32Report Abuse
vijayஅவனுக்கு மார்க்கெட் இருக்கா என்ன?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in