ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"தி தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில், "சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான படம், ஏற்கனவே இந்தியில் வெளியானது. இப்போது, அதே கதை, தமிழில் "நடிகையின் டைரி மலையாளத்தில் "க்ளைமாக்ஸ் என்ற பெயர்களில் தயாராகியுள்ளது.இந்தி பதிப்பில், வித்யா பாலன் நடித்தது போல், தமிழ், மலையாளம் என, இரண்டு மொழிகளிலும், சில்க் வேடத்தில் "சிலம்பாட்டம் சானா கான்நடித்துள்ளார்.இதில், நடிப்பில் மட்டுமின்றி, கவர்ச்சியிலும் வெளுத்துக் கட்டியிருப்பதாக சொல்லும், சானா கான், "சில்க் ஸ்மிதாவின் வாழ்வில் நடந்த சோகங்களையும், அவரது மோசமான முடிவினையும், தான் தத்ரூபமாக நடித்திருப்பதாக சொல்கிறார். "அவரது இறுதி முடிவு ரசிகர்களைப் போன்று என்னாலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது என்கிறார்.