இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தன் படங்களின் பாடல் காட்சிகளுக்காக, அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் டைரக்டர் ஷங்கர், "ஐ படத்தில், விக்ரம் - எமி ஜாக்சன் பங்கேற்கும் ஒரு டூயட் பாடலை, சைனீஸ் நடனத்தை புகுத்தி படமாக்குகிறார்.இந்த பாடலுக்காக, எமிக்கு சைனீஸ் நடனத்தை முறையாக பயிற்சி கொடுத்துள்ளார்களாம். ஏற்கனவே பாலே, வெஸ்டர்ன் நடன அசைவுகளில் நன்றாக தேர்ச்சி பெற்ற எமி, சைனீஸ் நடனத்தை இரண்டு வாரங்களிலேயே பயின்று விட்டாராம்.அதன்பின், சீன பின்னணியில் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், விக்ரமுடன் இணைந்து, நடனமாடி அசத்தியுள்ளார் எமி ஜாக்சன். இந்த பாடலுக்காக, 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செட்டில், சில புதிய வகை பாம்புகளையும் நீந்த விட்டு, புதிய யுக்தியுடன் படம் பிடித்துள்ளனராம்.