தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம், வர்ணம் படங்களில் நடித்துள்ள மோனிகாவுக்கு, திறமை இருந்தும், தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. "கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற, அவரது பிடிவாதம் தான், இதற்கு காரணமாம். இதனால், இயக்குனர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும், மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும், கடும் முயற்சிக்கு பின், தற்போது, "நதிகள் நனைவதில்லை உட்பட, சில தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்துள்ளன. இந்தப்படம் பற்றி மோனிகா கூறும் போது, "நதிகள் நனைவதில்லை படத்தின் கதை, ஜனரஞ்சகமாகவும், யதர்த்தமாகவும் இருந்ததால், நடிக்க சம்மதித்தேன். கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை. ஆனால், வலுக்கட்டாயமாக எடுக்கப்படும், கவர்ச்சி காட்சிகளில் நடிப்பதில், எனக்கு விருப்பமில்லை என்கிறார்.