இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
"காதல் படத்தில் அறிமுகமானதால், சந்தியாவுக்கு, "காதல் சந்தியா என்ற பெயர் ஒட்டிக் கொண்டு விட்டது. காதல் படத்துக்கு பின், பல படங்களில் நடித்தாலும், எந்த படமுமே, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, அமையவில்லை. இதனால், மலையாளம், தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்தினார். தமிழில்,"இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் என்ற படத்தில், கடைசியாக தலைகாட்டினார். அதற்கு பின், ஆளையே காணோம். இப்போது, நீண்ட இடைவெளிக்கு பின், "யா யா என்ற படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில், சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறாராம், சந்தியா.
இதுகுறித்து, சந்தியா அளித்துள்ள பேட்டியில், "சந்தானத்துடன் ஜோடியாக நடிப்பது குறித்து, பலரும் ஆச்சர்யம் தெரிவிக்கின்றனர். இது, முழுமையான காமெடி படம். இதுவரை, காமெடி படத்தில் நான் நடித்தது இல்லை. எனவே தான், இந்த படத்தில் நடிக்க, சம்மதித்தேன். அதிலும், இந்த படத்தில், எனக்கு, பெண் போலீஸ் வேடம். காமெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறேன் என, கூறியுள்ளார்.