தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரேணிகுண்டா படத்தில் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். 3 அடி உயரமுள்ள கணேசன், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தென்மேற்கு பருவக்காற்று, ஆயிரம் விளக்கு, பருவக்காற்று, ஆயுதப்போராட்டம் ஆகியவை முக்கியமான படங்கள். பில்லா-2 படத்தில் அஜீத்துடன் நடித்தார். தற்போது சொகுசு பேருந்து, வேல்முருகன் போர்வெல், காதலைத் தவிர வேறொன்றும் இல்லை உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
29 வயதாகும் தீப்பெட்டி கணேசன் மதுரையைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த ரேஷ்மா என்பவரை காதலித்து வந்தார். ரேஷ்மா மதுரை கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு இருந்தால் நண்பர்கள் உதவியுடன் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டார். தற்போது மதுரையில் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார்கள்.