டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜீத், சண்டை காட்சியில் நடித்தபோது, அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக, அவர், விரைவில் ஆபரேஷன் செய்து கொள்ளப் போவதாகவும் வெளியான செய்திகள், அவரது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உடனடியாக ஆபரேஷன் செய்து கொள்ளும் திட்டம், அஜீத்துக்கு இல்லையாம். தற்போது, ஆர்யா, நயன்தாரா, டாப்சியுடன் நடித்து வரும், "வலை படத்தையும், அதற்குபின், "சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கும் படத்தையும், முடித்து கொடுத்த பின் தான், ஆபரேஷன் செய்து கொள்ளப் போகிறாராம். ஆபரேஷனுக்கு பின், நான்கு மாதங்கள் ஓய்வெடுக்கும் ஐடியா, அஜீத்திடம் உள்ளதாம். இதற்கிடையே, அஜீத்தின் அடுத்த படத்துக்கு, "வெற்றி கொண்டான் என, பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், கோடம்பாக்கத்திலிருந்து, தகவல்கள் கசிகின்றன.