Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!!

26 மார்,2013 - 18:31 IST
எழுத்தின் அளவு:

சென்னை: தீ விபத்தில் சிக்கி, மருத்துவ சிகிச்சை பெற்று வந்த, பழம் பெரும் நடிகை சுகுமாரி, சிகிச்சைப் பலனின்றி,  மரணமடைந்தார்.

பழம்பெரும் நடிகை சுகுமாரி, 74.  திருவிதாங்கூர்  சமஸ்தானத்தில், நாகர்கோவில் இருந்தபோது, 1940ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் தேதி பிறந்தார்.  சிறு வயதில், திருவிதாங்கூர் சகோதரிகளான லலிதா, பத்மினி, ராகினி ஆகியோருடன், பரத நாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டியங்களை பயின்றார். சுகுமாரியின் தாயும், திருவிதாங்கூர் சகோதரிகளின்  தாயும், சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பின், சகோதரிகளுடன், பல வெளிநாடுகளுக்கு சென்று நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார். 10வது வயதில், நடிப்புலகில் கால் பதித்தார். நடிகை சுகுமாரியின் முதல் படம், "பட்டிக்காடா  பட்டணமா! ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடத்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனரான, பீம்சிங் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கடந்த சில  ஆண்டுகளாக,  தி.நகர், நார்த்போக் சாலையில், குடும்பத்துடன் வசித்து, "டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார்.  சில நாட்களுக்கு முன், அவர் வீட்டில் விளக்கு ஏற்றும் போது,  உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.  இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில், சுகுமாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து, முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில், இன்று (26.03.2013) மாலை, 5:30 மணிக்கு, நடிகை சுகுமாரி, சிகிச்சைப் பலனின்றி மரணடைந்தார். இதையடுத்து, அவர் உடல், தி.நகர் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. திரையுலகைச் சேர்ந்த  நடிகர், நடிகைகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  இறுதி சடங்கு, நாளை மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான சுகுமாரியின் மறைவு, திரைப்படத் துறையினருக்கும், கலை துறையினருக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு,  முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சிக்ஸ்பேக்குக்கு மாறுகிறார் கார்த்தி!சிக்ஸ்பேக்குக்கு மாறுகிறார் ... அஜீத்தின் அடுத்த படம் வெற்றி கொண்டான்? அஜீத்தின் அடுத்த படம் வெற்றி ...


வாசகர் கருத்து (17)

LAX - Trichy,இந்தியா
27 மார்,2013 - 12:03 Report Abuse
LAX 1940 அக்டோபர் 6 -ல் பிறந்து, 1951-ல் கலைத்துறையில் கால்பதித்து, 72 வயதில் மறைந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
0 members
0 members
16 members
Share this comment
Raja - Doha-Qatar,இந்தியா
27 மார்,2013 - 10:40 Report Abuse
Raja நல்ல ஒரு திறமையான நடிகை, மேலே குறிப்பிட்ட தகவல் முற்றிலும் தவறானது , இவர் பாசமலர் படத்திலே நடித்து இருக்கிறார் , பின் எப்படி பட்டிகாட பட்டணமா படத்தில் அறிமுகமாவார்....இருப்பினும் அந்த நல்ல பண்பட்ட நடிகையின் ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன். ராஜா கோமஸ்....
Rate this:
0 members
1 members
5 members
Share this comment
sriraman triplicane - chennai,இந்தியா
27 மார்,2013 - 09:57 Report Abuse
sriraman triplicane பழம் பெரும் நடிகை சுகுமாரி அம்மா அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் மிக சிறந்த நடிகை
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
nana - muscat,ஓமன்
27 மார்,2013 - 09:52 Report Abuse
nana really we have lost a great actress. recently saw her in jaya tv thirumbiparkeran programme. like others me too admire her acting as well as dancing in pasamalar. she has played both mother and villi role. i pray god for her soul to rest in peace
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
sundaram - Coimbatore,இந்தியா
27 மார்,2013 - 09:37 Report Abuse
sundaram இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் நகைச்சுவை இந்த செய்தியாகத்தான் இருக்க முடியும். மிக பிரபலமான அரசியல் நெடி வீசும் படமான முகமது பின் துக்ளக் திரைப்படத்திலும் சோவின் இதர நாடகங்களிலும் நடித்தவர் திருமதி. சுகுமாரி பீம்சிங் அவர்கள். நடிப்பிசை புலவர் என்று புகழப்பட்ட திரு. கே ஆர் ராமசாமி அவர்கள் நடித்த ஓர் இரவு படத்திலேயே சுகுமாரி அறிமுகமானார். உண்மை என்பது இப்படி இருக்க பட்டிக்காடா பட்டணமா படத்தில் தான் பத்து வயதில் அறிமுகமானார் என்று கதைப்பது எப்படி பொருந்தும்? அப்படியே வைத்துக்கொண்டாலும் பட்டிக்காடா பட்டணமா படம் வெளிவந்தது '70 களில் . அப்போது பத்து வயது என்றால் இப்போது எப்படி 74 வயதாகும்?
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Moone Moonu vaarthai
  Tamil New Film Kadhal pola veredhu
  • காதல் போல வேறேது
  • நடிகர் : எஸ்.ஆர்.அருண்ராஜ்
  • நடிகை : கிருஷ்ணபிரியா
  • இயக்குனர் :வி.கே.சிதம்பரம்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in