தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சந்தானம், கருணாஸ் வரிசையில் கஞ்சா கருப்பும் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். "மலையன்" படத்தை இயக்கிய எம்.பி.கோபி, கஞ்சா கருப்பு பின்னாடியே இருந்து அவர் மனசை கரைத்து தயாரிப்பாளராக்கி விட்டார். கருப்புவும் சாதாரண ஆள் கிடையாது துணைக்கு சில நண்பர்களை சேர்த்துக் கொண்டு 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் "வேல்முருகன் போர்வெல்ஸ்" என்ற படத்தை துவக்கி விட்டார். தான் ஹீரோவாக நடித்தால் சரிப்பட்டு வராது என்று நினைத்து "அங்காடித் தெரு" மகேஷ், ஆருஷியை ஹீரோ ஹீரோயின் ஆக்கிவிட்டார்.
"நீங்க ஏன் ஹீரோவா நடிக்கலை" என்று கேட்டால். "நம்மளலெல்லாம் எவண்ணே ஹீரோன்னு ஒத்துப்பாய்ங்க. சின்னஞ் சிறுசுக ஆடிப்பாடுங்க. நாம ஆடுனா நாயை அவுத்து விட்டுருவாங்க. நாம அப்படியே காமெடி பண்ணிட்டு போக வேண்டியதுதான். கதைப்படி நான் போர்வெல் லாரி ஓணர். அதோட டிரைவர் மகேஷ். நான் அவரை கன்னா பின்னான்னு திட்டுற மாதிரி சீன் நிறைய இருக்கு. இதுதுல பரத்தோ, விஷாலோ, அட நம்ம சிவகார்த்திகேயனோ நடிச்சா அவிங்கள திட்ட முடியுமாண்ணே. கோவிச்சுக்வாங்கல. அதான் மகேசை போட்டேன். அவன் நம்ம பையன் ரெண்டு அடி அடிச்சாக்கூட பட்டுக்குவான்.
அப்புறண்ணே... படம் முழுக்க போர்வெல் லாரி ஒரு கேரக்டராவே வருது. வாடகைக்கு கேட்டா அநியாய வாடகை கேக்குறாங்க. அதான் 20 லட்சத்துல சொந்தமா போர்வெல் லாரி வாங்கிட்டேன். படம் நல்லா ஓடுச்சுன்னா எங்க ஊரு நாட்டரசன் கோட்டை பஞ்சாயத்துக்கு அந்த லாரிய ஃபிரீயா கொடுத்துடலாமுன்னு இருக்கேன். ஓடலேன்னே வித்து கடனை அடைச்சிட வேண்டியதுதான் என்ன நான் சொல்றது என்கிறார் கருப்பு.