Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கோடிகளில் புரளும் திரை நட்சத்திரங்கள்! ரஜினி-அனுஷ்கா டாப்!!

26 மார்,2013 - 15:26 IST
எழுத்தின் அளவு:

இன்றைக்கு உடனடி கோடீசுவரனாக இருக்கும் ஒரே வழி, சினிமா நட்சத்திரமாகி விடுவதுதான். அதனால்தான், ரியல் எஸ்டேட் புள்ளிகளும் திடீர் பணக்காரர்களும் பணத்தை மடியில் கட்டிக் கொண்டு படம் எடுக்க வருகிறார்கள். அவர்களது வாரிசுகளை ஹீரோக்களாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த நாளே அவர் கோடீஸ்வரன்தான். இதற்கு தற்போதைய உதாரணங்கள் பவர் ஸ்டாரும், விஜய் சேதுபதியும். பவர் பணம் கொடுத்து நடித்தார். பணம் போட்டு சொந்தப் படம் எடுத்தார். ஒரு பட வெற்றி அவரை இழந்த பணத்தை மீட்க வைத்து கோடீஸ்வரனாக்கி விட்டது. கூத்துப் பட்டறையில் கிளர்க்காக இருந்தவர் விஜய்சேதுபதி. குறும்படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் வெறும் 20 ஆயிரம் சம்பளத்தில் "தென்மேற்கு பருவக்காற்று" படத்தில் நடித்தார். "பீட்சா"வின் வெற்றிக்கு பிறகு இப்போது அவர் கையில் பத்து படங்கள். "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்", "பீட்சா" படங்களுக்கு எட்டு லட்சம் சம்பளம் வாங்கியவர். இப்போது கேட்பது ஒண்ணேகால் கோடி.

முதலிடத்தில் ரஜினி

இந்த சம்பள விஷயத்தில் முதலிடத்தில் இருப்பது எப்போதும் போல சூப்பர் ஸ்டார் ரஜினிதான். "எந்திரன்" படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் 23 கோடி. "கோச்சடையான்" மகள் படம் என்பதால் சம்பளம் வாங்காமல் நடிக்கிறார். படத்தின் பட்ஜெட்டில் ரஜினியின் சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும். ரஜினி அடுத்து வெளி பேணர்களில் நடித்தால் 50 கோடி சம்பளம் தர பல நிறுவனங்கள் தயாராக இருக்கிறது.

இரண்டாம் இடம் கமலுக்கு

கமலுக்கு இரண்டாவது இடம். கமலை பொறுத்தவரை இவ்வளவு தான் சம்பளம் என்று பிக்ஸ் பண்ணிக்கொள்ள மாட்டார். வெற்றிகளுக்கு ஏற்ப ஏற்றி இறக்கி வாங்குவார். "தசாவதாரம்" படத்துக்கு 10 கோடி சம்பளம் கொடுத்தார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். அடுத்து அவர் நடித்த உன்னைபோல் ஒருவனும், விஸ்வரூபமும் சொந்தப் படங்கள். விஸ்வரூபம் வெற்றி பெற்று விட்டதால் தற்போது தன் சம்பளத்தை 25 கோடியாக பிக்ஸ் செய்திருக்கிறார்.

மூன்று - நான்கில் விஜய் - அஜித்

10 கோடி வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த விஜய் "துப்பாக்கி" ஹிட்டுக்கு பிறகு 15 கோடியாக உயர்த்தி விட்டார். "தலைவா"வுக்கும் "ஜில்லா"வுக்கும் உயர்த்திய சம்பளத்தைத்தான் வாங்குகிறார். 2014ல் தன் சம்பளத்தை 20 கோடியாக உயர்த்துவார். ஒருவேளை தலைவாவும், ஜில்லாவும் சரியாக போகவில்லை என்றால் மீண்டும் 10 கோடியிலிருந்து கணக்கை துவக்குவார்.

* கிட்டத்தட்ட விஜய் ரேன்ஞ்சுதான் அஜீத்தும். 8 முதல் 12 கோடி வரை ஆளுக்கு தக்கபடி பெற்றுக் கொள்வார் "பில்லா 2" வுக்கு அவர் வாங்கிய சம்பளம் 12 கோடி. ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் படத்துக்கு சம்பளம் கேட்கவில்லை. படத்தின் லாபத்தில் இத்தனை சதவிகிதம் கொடுங்கள் என்று பேசியிருப்பதாக தகவல். காரணம் தயாரிப்பாளர் இப்போது சம்பளம் கொடுக்கும் நிலையில் இல்லை. அடுத்து விஜயா புரொடக்ஷன் தயாரிக்கும் படத்துக்கு 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

* நடிகர்களில் சம்பள விஷயத்தில் சூர்யாவும், கார்த்தியும் மிகவும் புத்திசாலிகள். தெலுங்கு பக்கம் தங்கள் படம் நன்றாக ஓடும் என்பதால் அதற்கும் சேர்த்து சம்பளம் பேசுவார்கள். அல்லது தெலுங்கு ரைட்சை தனியாக வாங்கிக் கொண்டு அதை பலகோடிக்கு விற்று விடுவார்கள். இது தவிர சூர்யா படத்துக்கு 7 முதல் 10 கோடி வரை வாங்குகிறார். கார்த்தி 5 முதல் 7 கோடி வாங்குகிறார். விளம்பர வருமானங்கள் தனி. ஆக.... இப்போது சினிமாவில் அதிகம் சம்பாதிப்பது சிவகுமார் பேமிலிதான்.

* சூர்யாவைப் போலவே தெலுங்கு ரைட்சையும் சேர்த்து வாங்கும் நடிகர் விஷால். 3 முதல் 5 கோடி சம்பளம் வாங்கும் விஷால் கூடவே தெலுங்கு ரைட்சை வாங்கி அதனையும் 3 கோடி வரைக்கும் விற்றுக் கொள்வார். ஆர்யாவின் சம்பளம் விஷால் அளவுதான். ஆனால் தெலுங்கு ரைட்ஸ் கேட்பதில்லை. "சேட்டை" படத்துக்கு நாலரை கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

* விக்ரம் 10 கோடியை தாண்டித்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்திய அவரது படங்கள் சரியாக போகாததால் கொஞ்சம் குறைத்துக் கொள்ள முன்வந்திருக்கிறார். இருந்தாலும் ஷங்கரின் "ஐ" படத்துக்கு அவர் பெற்றுள்ள சம்பளம் 11 கோடி. சிம்புவின் சம்பளம் 5 முதல் 7 கோடி. கிட்டத்தட்ட தனுஷின் சம்பளமும் சிம்பு அளவுதான். ஆனால் தனுஷிடம் ஒரு நல்ல பழக்கம், நல்ல படம் நல்ல கதை என்றால் சம்பளத்தை பெரிதாக கருத மாட்டார். "மரியான்" படத்தில் குறைந்த சம்பளம் பெற்றே நடித்து வருகிறார். ஜீவாவின் சம்பளம் 5 கோடிக்கு உள்தான். சமீபத்திய படங்களின் தோல்வியால் 3 கோடிக்கு இறங்கி வந்திருக்கிறார். ஜெயம்ரவியின் சம்பளம் 3 முதல் 5 கோடி.

* காமெடியன்களில் அதிகம் சம்பளம் வாங்குவது இன்றைய நிலவரப்படி சந்தானம். ஒரு நாளைக்கு 5 முதல் 7 லட்சம். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சத்தியமா நம்புங்க பவர் ஸ்டார். ஒரு நாளைக்கு 3 முதல் 5 லட்சம் வாங்குகிறார். வடிவேலு முன்பு தினசரி சம்பளம் வாங்கினார். இப்போது ஒரு படத்துக்கு இத்தனை கோடி கொடுத்து விடுங்கள் என்கிறாராம். குணசித்திர நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குகிறவர் பிரகாஷ்ராஜ். காட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை பெற்றுக் கொள்வார்.

நடிகைகளில் அனுஷ்கா-நயன்தாரா டாப்

நடிகைகளில் கோடியை தாண்டி சம்பளம் பெறுகிறவர்கள் நயன்தாரா, அனுஷ்கா, இலியானா ஆகியோர். இப்போது இந்த பட்டியலில் அமலாபாலும், காஜல் அகர்வாலும், சமந்தாவும், ஸ்ருதியும் இணைந்திருக்கிறார்கள். த்ரிஷா எப்போதும் ஒரே மாதிரியாக சம்பளம் பெறுவார். தமிழ் என்றால் 60 லட்சமும், தெலுங்கு என்றால் 75 லட்சமும் பெற்றுக் கொள்வார். அஞ்சலி 50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்.

Advertisement
நல்ல கதை தான் பெயர் பெற்று தரும்; படத்தின் பட்ஜெட் அல்ல: அழகி மோனிகா பேட்டி!நல்ல கதை தான் பெயர் பெற்று தரும்; ... கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் ...

வாசகர் கருத்து

shankaran - chennai,இந்தியா
27 ஜன,2014 - 13:36
shankaran முதலில் மீடியாக்காரர்கள் சினிமா ஸ்டார்களை தூக்கி வைத்து கொண்டாடுவதை நிறுத்தவேண்டும். எத்தனையோ முக்கிய விஷயங்கள் நாட்டிற்க்கு தேவை உதவாத சினிமா அல்ல.
shankaran - chennai,இந்தியா
27 ஜன,2014 - 13:27
shankaran sinthikka தெரியாத மக்கள் இருக்கும் வரை இந்த ஸ்டார்கள் எல்லாம் கோடிகளில் கொழித்து கொண்டுதான் இருப்பார்கள். இது 100% நம்ம தவறுதான்.
Saravana kumar - madurai,இந்தியா
01 ஏப்,2013 - 12:58
Saravana kumar கஷ்ட படுறாங்க ,, சம்பதிகிரங்க ,, அவங்க ஒன்னும் திருடலையே அவங்க கஷ்டம் அவங்களுக்கு Thhan தெரியும்
Vaal Payyan - Chennai,இந்தியா
29 மார்,2013 - 17:31
Vaal Payyan விடுங்க பாஸு .. ஏன் கொந்தளிக்குறீங்க ... நீங்க அங்கே போய் ஜெயிச்சாலும் சம்பாரிக்க தான் பார்ப்பீங்க ... சேவை செய்ய இல்ல ... விவசாயி ரத்தம் சிந்தி உழாச்சன்னு நீங்க ஒரு கிலோ அரிசிக்கு 500 ரூபா கொடுப்பீங்களா ... ஆனா இந்திரன் பட டிக்கெட் 1000 ரூபா கொடுத்து பார்ப்போம் .. தப்பு நம்ம மேலயும் இருக்குது பாஸு ....
ramar - madurai,இந்தியா
28 மார்,2013 - 00:01
ramar வாழ்த்துக்கள்..
Tamilan - bangalore,இந்தியா
27 மார்,2013 - 15:52
Tamilan என்ன கொடும இது . என் நாட்டு தமிழ் ellam அங்கே ஒரு வேலை உணவின்றி தவிக்கின்றது இங்கே இவர்களுக்கு குளிபதற்கு பன்னிர். வாழ்க தமிழ் நாடு.
Thamizh - Bangalore,இந்தியா
27 மார்,2013 - 15:47
Thamizh தமிழனுக்கு ஆதரவுதரத ரஜினி படங்களை இனிமேல் தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது. தமிழனை வைத்து பனம் சம்பாரிக்க தெரிகிறது , ஆனால் ஆதரவு தர முடியவில்லையோ ? இதுதான் மொழி வெறியா? ரஜினியின் உடல்நலம் சரியாக எத்தனை தமிழன் என்னனவோ வேண்டுதல் இருந்தான் , ஆனால் ரஜினி நமக்கு என்ன செய்கிரார் ???
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
27 மார்,2013 - 14:59
R.BALAMURUGESAN ...இங்கு கோடிகளில் புரண்டது பத்தாது என்று, அரசியலுக்கும் வேறு வந்து விடுகிறார்கள்... கோடிகளில் குளிப்பதற்கும்... கும்மியடிப்பதற்கும்...
Mathan Gopal - riyadh,சவுதி அரேபியா
27 மார்,2013 - 12:47
Mathan Gopal சினிமா காரண முதல்ல இந்த நாட்ட வீட்டு துரத்தனும், உருக்கு சோறு போடுற உழவன் பசியால சாகுறான், இந்த நாட்ட நாசம் பண்பற இவங்களுக்கு சொகுசு வாழ்க்கையா. இவங்க நம்மா நாட்டுக்கு புடுச்ச கேடு. வாழ்க பாரதம்........
jeyam - Srivilliputtur,இந்தியா
27 மார்,2013 - 12:33
jeyam உலகத்திலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் திரைப்படங்கள் எடுக்கப்படுகிறது. மூணு பட தோல்வியை, ஒரு படத்தின் வெற்றி சமாளித்து லாபத்தையும் கொடுத்துவிடுவதால் பலரும் திரைப்படம் எடுக்கிறார்கள். திருட்டு விசிடி ,ஆன்லைன் ப்ரீ மூவி வந்தபிறகும் திரைப்பட தொழில் லாபம் கொடுக்கிறதென்றால் அது நிச்சயமாக "பணம் காய்க்கும் மரம்தான்" என்று எல்லாரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். திரைத்துரையில் இருக்கும் அதிஷ்டசாலிகளுக்கு வாழ்த்துக்கள். ஆனாலும் இது ஒரு "ஸ்பெக்குலேஷன் கேம்" மாதிரி. வாய்ப்பு இல்லாதபட்சத்தில் திரைத்துறையை விட்டு விலகியே இருப்பவர்கள்தான் புத்திசாலிகள். சொந்தமாக படமெடுத்து கையை சுட்டவர்கள் ஏராளம். நடிப்பில் நம்பர் ஒன் நாயகன் கமல் சொந்த படங்கள் மூலம் நிறைய இழந்திருக்கிறார். ஏனென்றால் நாம் திறமைசாலிகளாக இருந்தாலும் நம் வேலையை பர்பெக்டாக செய்தாலும் மக்களின் ரசனை என்பது யாராலும் எல்லா காலகட்டங்களிலும் புரிந்துகொள்ள கடினமானது.
Alam Kumaran - Khafji,சவுதி அரேபியா
27 மார்,2013 - 08:59
Alam Kumaran வெள்ளம் திங்குறது ஒருத்தன் வெரல் சூப்புரது இநோருதன் அது மாதிரி இருக்கு இவங்க பண்ணுறது.
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
27 மார்,2013 - 01:04
குடியானவன்-Ryot இவர்களின் கொட்டத்தை அடக்க ஒருவழி watch movie online
bacqrudeen - doha,கத்தார்
26 மார்,2013 - 23:03
bacqrudeen இது போதாதென்று...நடிகர்கள் எதாவது சிக்கலில் மாட்டிகொண்டால், ரசிகர்கள் மனியார்டர் வைப்பார்கள்.
rameshchakkarapani - singapore,சிங்கப்பூர்
26 மார்,2013 - 21:19
rameshchakkarapani ஓகே
Mohamed Iqbal - jubail,இந்தியா
26 மார்,2013 - 21:03
Mohamed Iqbal நான் வருஷத்துக்கு இரண்டு தடவை கோடி சட்டையும் கோடி வேட்டியும் உடுத்துவேன்
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
26 மார்,2013 - 18:37
பி.டி.முருகன்  இந்தியா ஏழை நாடு என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். பல கொடீஸ்வரிகளும் கோடீஸ்வரர்களும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்.
gunasekaran - muscut ,ஓமன்
26 மார்,2013 - 18:17
gunasekaran சினிமாக்காரன் கிரிக்கெட் ஆட்டக்காரன் இவர்களை பற்றி ஒருசெய்தியும் போடாமல் இருந்திருந்தாலே இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும். உங்களைபோன்ற ஆட்களாலே கொழுக்க வச்சிடரிங்க. எங்க வயித்தெரிச்சலையும் கொட்டிக்கீரிங்க. எல்லா பத்திரிகைகாரனும் இவங்களை பற்றி எழுதுவதை நிறுத்துங்கப்பா உங்களுக்கு கோடி புண்ணியம் கிட்டும்.
Hm Join - Chennai,இந்தியா
26 மார்,2013 - 17:57
Hm Join யப்பா தலைய சுத்துதே....... நான் மாசம் ரூ. 15000 வாங்குவதுக்குள்ள .......... கிழியுதே......
ashok - madurai,இந்தியா
26 மார்,2013 - 17:19
ashok இதை எல்லாம் கேட்டு நாம் இவர்கள் படத்திற்கு டிக்கெட் வாங்குவது ................. தெருக்கோடியில் நின்று..........
Jayan - Jeddah,சவுதி அரேபியா
26 மார்,2013 - 17:16
Jayan எனக்கு அனுஷ்காவை கல்யாணம் பண்ணி கொண்டு குடும்பம் நடத்த ரொம்ப ஆசை.
Bala Subramani - Pittsburgh,யூ.எஸ்.ஏ
26 மார்,2013 - 17:06
Bala Subramani கோடி வாங்கும் கேடிகள். தமிழன் முழித்துக்கொண்டு விட்டால்? இவர்கள் நிலைமை.
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Saghasam
  • சாஹசம்
  • நடிகர் : பிரஷாந்த்
  • நடிகை : ,நர்கீஸ் பக்ரி
  • இயக்குனர் :அருண் ராஜ் வர்மா
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in