இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கொக்கி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா காந்தி. சில தமிழ் படங்களில் நடித்து விட்டு பிறகு கன்னடத்திற்கு சென்றார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார். அதே கையோடு அரசியலுக்கும் சென்றார். கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். கடந்த தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் கட்சி சீட் கொடுக்கவில்லை. இதனால் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். "அரசியல் கட்சியில் இருந்தால் பதவியில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியலே வேஸ்ட்" என்பது அவரது கருத்து.
தற்போது அவர் பி.எஸ்.ஆர் காங்கிரசில் இணைந்துள்ளார். இந்தக் கட்சி பூஜாவை எம்.எல்.ஏவாக ஆக்கியே தீருவது என்று சபதம் எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் கட்சி உறுதியாக ஜெயிக்கும் வாய்ப்புள்ள ரெய்ச்சூர் தொகுதியில் பூஜாவை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த தொகுதி, கட்சியின் நிறுவனர் ஸ்ரீராமுலுவின் சொந்த தொகுதியாகும். இங்கு இந்த கட்சிதான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. எனவே பூஜாவும் ஜெயிப்பது உறுதி என்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் கர்நாடக அரசியலில் நடிகர்களின் செல்வாக்கு குறைவுதான். கடந்த தேர்தலில் அம்ரீசையே சொந்த தொகுதியில் தோற்கடித்தவர்கள் கர்நாடக மக்கள். அதனால் பூஜாவின் வெற்றி அவ்வளவு எளிதானதல்ல என்கிறார்கள். இதற்கிடையில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையை நிராகரித்ததும், சமீபத்தில் வெளியான டாப்லெஸ் படங்களும் சாண்டல்வுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.