Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகை பூஜா காந்தி!

26 மார்,2013 - 14:45 IST
எழுத்தின் அளவு:

கொக்கி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா காந்தி. சில தமிழ் படங்களில் நடித்து விட்டு பிறகு கன்னடத்திற்கு சென்றார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார். அதே கையோடு அரசியலுக்கும் சென்றார். கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். கடந்த தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் கட்சி சீட் கொடுக்கவில்லை. இதனால் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். "அரசியல் கட்சியில் இருந்தால் பதவியில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியலே வேஸ்ட்" என்பது அவரது கருத்து.

தற்போது அவர் பி.எஸ்.ஆர் காங்கிரசில் இணைந்துள்ளார். இந்தக் கட்சி பூஜாவை எம்.எல்.ஏவாக ஆக்கியே தீருவது என்று சபதம் எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் கட்சி உறுதியாக ஜெயிக்கும் வாய்ப்புள்ள ரெய்ச்சூர் தொகுதியில் பூஜாவை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த தொகுதி, கட்சியின் நிறுவனர் ஸ்ரீராமுலுவின் சொந்த தொகுதியாகும். இங்கு இந்த கட்சிதான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. எனவே பூஜாவும் ஜெயிப்பது உறுதி என்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலும் கர்நாடக அரசியலில் நடிகர்களின் செல்வாக்கு குறைவுதான். கடந்த தேர்தலில் அம்ரீசையே சொந்த தொகுதியில் தோற்கடித்தவர்கள் கர்நாடக மக்கள். அதனால் பூஜாவின் வெற்றி அவ்வளவு எளிதானதல்ல என்கிறார்கள். இதற்கிடையில் நிச்சயம் செய்த மாப்பிள்ளையை நிராகரித்ததும், சமீபத்தில் வெளியான டாப்லெஸ் படங்களும் சாண்டல்வுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
தயாரிப்பாளரான டிரைவர்தயாரிப்பாளரான டிரைவர் போர்வெல் லாரி வாங்கினார் கஞ்சா கருப்பு போர்வெல் லாரி வாங்கினார் கஞ்சா ...

வாசகர் கருத்து

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
26 மார்,2013 - 15:09
Angry ஜெய் போட்ருவோம் ஓட்டை
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Eli
    • எலி
    • நடிகர் : வடிவேலு
    • நடிகை : சதா
    • இயக்குனர் :யுவராஜ்
    Tamil New Film Khaipesi Kadhal
    • கைபேசி காதல்
    • நடிகர் : கிரண் (புதுமுகம்)
    • நடிகை : அர்பிதா (புதுமுகம்)
    • இயக்குனர் :திம்மம்பள்ளி சந்த்ரா
    Tamil New Film Ru
    • ரு
    • நடிகர் : இர்பான்
    • நடிகை : ரக்ஷ்தா ,893
    • இயக்குனர் :சதாசிவம்
    Tamil New Film Adhiradi
    • அதிரடி
    • நடிகர் : மன்சூர் அலிகான்ž
    • நடிகை : ,மெளமிதா செளத்ரி
    • இயக்குனர் : ,பாலு ஆனந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in