பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
"எங்கேயும் எப்போதும் படத்திற்கு பின் ரொம்ப கவனமாக படங்களை தேர்வு செய்து வருகிறார் ஜெய். அதன் பின், "தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும், ராஜா ராணி என, சில படங்களில் மட்டுமே நடிப்பவர், இப்போது, "திருமணம் எனும் நிக்காஹ் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். சில கதைகள் சிரிக்க வைக்கும், சில கதைகள் சிந்திக்க வைக்கும். ஆனால், அந்த இரண்டு அம்சங்களும் உள்ள படம் இது என்று சொல்லும் ஜெய், இப்படம் என்னை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும் கதை என்பதால், இதில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார். மேலும், இதுவரை சிங்கிள் ஹீரோயின்களுடன் மட்டுமே, டூயட் பாடிய எனக்கு, இப்படத்தில் இரண்டு ஜோடி. அதில் ஒருவர் தனுஷ் நடிக்கும், "நையாண்டியில் நடித்து வரும் நஸ்ரியா நஸிம் என்கிறார் ஜெய்.