Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 லட்சம் கேட்டு மிரட்டிய லட்டு நடிகை விசாகா!

22 மார், 2013 - 15:48 IST
எழுத்தின் அளவு:

பிடிச்சிருக்கு படத்தில் அறிமுகமான விசாகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப்பிறகு தமிழில் முன்னணி நடிகையாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் அவரை தொடர்பு கொண்ட கம்பெனிகளிடம் 50 லட்சம் சம்பளம் கேட்டு பெரிய அதிர்ச்சி கொடுத்தார் நடிகை. அதனால் இது நமக்கு எட்டாத லட்டு என்று விசாகாவை ஓரங்கட்டினர் படாதிபதிகள். அதையடுத்து சந்தானம், பவர்ஸ்டார் உள்ளிட்ட நடிகர்களின் சிபாரிசை நாடினார் நடிகை. அவர்கள் இருந்த பிசியில் அவரை ஏரெடுத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் அப்படத்தில் நாயகனாக நடித்த சேதுவைப்போல விசாகாவும் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்தார்.

இந்த சமயம்தான், அஜீத்தை தான் இயக்கும் புதிய படத்திகு ஒரு நடிகை தேடி வந்தார் சிறுத்தை சிவா. விஷயத்தை கேள்விப்பட்ட விசாகா விழுந்தடித்து ஓடினார். சென்றவரை பல கோணங்களில் போட்டோ எடுத்து பார்த்த சிவா, ஓ.கே செய்து விட்டார். அதையடுத்து, அஜீத்துக்குத்தானே ஜோடி என்று அவர் கேட்டபோது, அஜீத்துக்கு ஜோடி இல்லை. ஆனால் ஜோடி மாதிரி என்றாராம். இதனால் குழம்பிப்போன விசாகா, வேறு நடிகை யாரேனும் படத்தில் இருக்கிறார்களா? என்றபோது, தமன்னா இருக்கிற விவரத்தை சொல்லியிருக்கிறார். அப்படின்னா நாம இரண்டாவது நாயகி மாதிரிதான் என்பதை புரிந்து கொண்ட அவர், அஜீத் படத்தில் நடிக்கிறதை வைத்து வேறு படங்களை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் அடக்கஒடுக்கமாக கமிட்டாகி விட்டார்.

அதோடு, என்ன சம்பளம் கேட்கிறீர்கள்? என்று கேட்டபோது, மனசுக்குள் இருந்த 50 லட்சத்தை சொன்னால், கட்அவுட் சொல்லி விடுவார்கள் என்று, நீங்களா பாத்து என்ன கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறேன் என பெருந்தன்மை காட்டினாராம் விசாகா. இதையடுத்து அப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் அவர், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் அஜீத்துக்கு ஜோடியாக தான் நடிப்பதாகவே பெரிய பில்டப் கொடுத்து வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Ananya Dixith - Pune,இந்தியா
23 மார், 2013 - 12:38 Report Abuse
Ananya Dixith இந்த மூஞ்சிக்கு 50 லட்சம் ஆஹ் ??? செம காமெடி...
Rate this:
prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
23 மார், 2013 - 10:05 Report Abuse
prabu.usa@gmail.com மலையாளி குட்டி 5 ரூபாவுக்கு போரமாட்ட
Rate this:
saminathan - ramanathapuram  ( Posted via: Dinamalar Android App )
23 மார், 2013 - 08:03 Report Abuse
saminathan நீங்க ஏன் பவர் கிட்ட ட்ரை பன்ன கூடாது
Rate this:
bacqrudeen - doha,கத்தார்
22 மார், 2013 - 20:53 Report Abuse
bacqrudeen காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளனும்னு நினைக்கிறார் போல
Rate this:
S.RAJA.S.V.KARAI - TENKAAI  ( Posted via: Dinamalar Android App )
22 மார், 2013 - 17:21 Report Abuse
S.RAJA.S.V.KARAI பூந்தி்யா இருந்துக்கிட்டு லட்டு ஆகறதுக்கு முன்ன கூட்டியே விலையை எற்றுனா எவன் வருவான் கிட்ட
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in