ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒளிப்பதிவாளர் வின்சென்ட் செல்வா இயக்கி உள்ள படம் "துள்ளி விளையாடு". யுவராஜ், தீப்தி என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் கலகலப்பான வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். முதன் முறையாக ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார். சென்ட்ராயனும், சூரியும் காமெடியாக நடித்துள்ளனர்.
நான்கு இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வெவ்வேறு கனவு இருக்கிறது. ஒருவனுக்கு நடிகனாக வேண்டும், ஒருவனுக்கு கோடீஸ்வரனாக வேண்டும். ஒருவனுக்கு விஞ்ஞானி ஆக வேண்டும், ஒருவனுக்கு அரசியல் தலைவராக வேண்டும். இந்த கனவுகள் திடீரென நிறைவேறிவிட்டால் அதனை அவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள் என்பதுதான் கதை. காமெடி, ஆக்ஷன் கலந்த கதை. படத்தைப் பார்த்த தணிக்கை குழு எந்த இடத்திலும் கத்தரி போடாமல் யூ சான்றிதழ் கொடுத்துள்ளது. வருகிற 29ம் தேதி ரிலீசாகுது.