டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சித்தார்த் - சமந்தா ஜோடியை இணைத்து, ஆந்திராவில் விதவிதமான காதல் செய்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன என்றாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதையோ, சேர்ந்து ஊர் சுற்றுவதையோநிறுத்தவில்லை. சமீபத்தில் கூட, இருவரும் இணைந்தே காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய, தங்களது பெற்றோர்களுடன் வந்தனர். அங்கு தரிசனம் செய்து விட்டு, இருவரும் ஜோடியாக அமர்ந்து, ராகு-கேது பூஜை செய்துள்ளனர்.இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் சித்தார்த்- சமந்தாவின் காதல் செய்திகள், பெரிய அளவில் பற்றி எரிகிறது. இருப்பினும், சமந்தா தரப்பில் இருந்து இந்த செய்திக்கு மறுப்போ, எதிர்ப்போ வெளியாகவில்லை. இந்த விவகாரத்தில், சமந்தா மனசில் என்ன இருக்கு என, தெரியாமல் புலம்புகிறது, டோலிவுட்.