ப்ரியா வாரியருக்கு இது நல்ல நேரம்! : மஞ்சிமா மோகன் | எங்களுக்கும் பொறுப்பு இருக்கு! | கிராமத்திலும் சுற்றுலா கொண்டாடலாம்! | தீபிகா காதில் ரன்பீர் ரகசியம்? | திரைப்பட இயக்குனர்கள் முதல்வருடன் சந்திப்பு | சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் |
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நந்திதா. அப்படத்தின் வெற்றி காரணமாக, தாய்மொழியான கன்னடத்தில் நடிப்பதை குறைத்து விட்டு, முழுநேர தமிழ் நடிகையாகிவிட்டார்."நளனும் நந்தினியும், எதிர்நீச்சல் உட்பட மூன்று படங்களில் நடித்து வரும் நந்திதா, கிளாமரை தவிர்த்து விட்டு, ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். இதில் "நளனும் நந்தினியும் படத்தில் மதுரை பெண்ணாகவே நடிக்கிறார். இதற்காக, பக்கா மதுரை கெட்டப்புக்கு மாறியிருக்கும் நந்திதா, அந்த ஏரியாவுக்கு படப்பிடிப்புக்காக சென்ற போது, அங்குள்ள மக்கள் இவரிடம் ரொம்ப பாசமாக பழகினார்களாம். "உங்களை பார்த்தால், நடிகை மாதிரி தெரியவில்லை. எங்கள் வீட்டு பொண்ணு மாதிரியே இருக்கு என்றெல்லாம் சொல்லி, நந்திதாவின் மனதில் இடம் பிடித்து விட்டார்களாம். இதனால், மதுரை மக்கள் மீது, நந்திதாவுக்கு அளவு கடந்த பாசம் வந்து விட்டது.