ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாண்டிராஜ் இயக்கியுள்ள கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. இதனையடுத்து படத்தை வருகிற மார்ச் 29ம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். மெரினா படத்திற்கு பிறகு டைரக்டர் பாண்டிராஜ் இயக்கி, தயாரித்துள்ள படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. விமல், சிவகார்த்திகேயன் ஹீரோக்களாகவும், பிந்து மாதவி, ரெஜினா ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். காதல் மற்றும் காமெடி கலந்து இப்படம் உருவாகியுள்ளது. யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து, படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு தணிக்கை குழுவுக்கு அனுப்பியிருந்தனர். படத்தை பார்த்த தணிக்கைகுழு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் யு சான்று கொடுத்துள்ளது. இதனையடுத்து யு சான்று கிடைத்த சந்தோஷத்தில் படத்தை வருகிற மார்ச் 29ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.