இனியாவுடன் ஆட்டம்போட்ட வெங்கட்பிரபு
"தமிழ்படம்" இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் 2வது படம் "ரெண்டாவது படம்". விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்கள். விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில். தற்போது புதிதாக பாடல் ஒன்றை சேர்த்துள்ளனர்.
"ரோசாப் பூவொன்று
ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்..."
என்று தொடங்கும் இந்த பாடலை 1980களில் பிரபலமான மெட்டில் போட்டிருக்கிறார் இசை அமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனம் அமைத்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண். இதற்கு யாரை ஆட வைக்கலாம் என்று யோசித்து, பிரியாணிக்கு கேப் விட்டிருக்கும் வெங்கட்பிரபுவை அழைத்து வந்து ஆட வைத்து விட்டார்கள். உடன் ஆடியிருப்பவர் இனியா. கடந்த நான்கு நாட்களாக செம்மொழி பூங்காவில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதுபற்றி இயக்குனர் சி.எஸ்.அமுதன் கூறியதாவது: கதையோடு தொடர்புடைய பாடல் காட்சிதான். 1980 பாணியிலான முகம் கொண்டவரை தேடியபோது வெங்கட்பிரபு நினைவு வந்தது. விஷயத்தை சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டு மறு நாளே ஆட வந்துவிட்டார். உடன் ஆடுபவர் இனியா என்றதும் இன்னும் சந்தோஷமாக ஆடினார். பாடலின் ஆடியோ யூ டியூப்பில் செம ஹிட்டாகியிருக்கிறது. படம் ரிலீசானதும் எல்லா டி.வியிலும் இந்தப் பாட்டுதான். என்றார்.
Tags »
Rendavuthu padam, Venkatprabhu, Iniya, Dance, ரெண்டாவது படம், வெங்கட்பிரபு, இனியா, ஆட்டம்,