பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வந்தபோதும், "சேஷ்மீ பட்டூர் என்ற, பாலிவுட் படத்தையும் கைப்பற்றியுள்ளார், டாப்சி. அந்த படத்தில், தெலுங்கை காட்டிலும், சற்றே கூடுதலாக கிளாமராக நடித்து, பாலிவுட் ரசிகர்களின் இதய துடிப்புகளை எகிற வைத்துள்ளாராம். "இப்படத்திற்கு பின், பாலிவுட்டில் முக்கிய நடிகை பட்டியலிலும் இடம் பிடித்து விடவேண்டும் என்று முழு வீச்சில் இறங்கியுள்ள டாப்சி, ஒரு முத்தக்காட்சியிலும் நடித்து, பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளாராம்.
சினிமா கேரியரில் முதன் முதலாக நடித்த முத்தக்காட்சி என்பதாலும், தன்னை ஒரு யூனிட்டே வேடிக்கை பார்த்ததாலும், அக்காட்சியில் நடிக்க, ரொம்பவே கூச்சப்பட்டுள்ளார், டாப்சி. அதனால் யூனிட் நபர்களை வெளியேற்றி விட்டு, முக்கிய டெக்னிஷியன்களை மட்டுமே வைத்து, அந்த காட்சியை படமாக்கினார்களாம். "அந்த காட்சி, சிறப்பாக வந்திருக்கிறது என, மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார், இயக்குனர்.