புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
"சிலம்பாட்டம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த, சானா கானுக்கு, அதற்கு பின், தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு சில தெலுங்கு, மலையாள படங்களில் தலைகாட்டி வந்தார். பாலிவுட்டிலும், சில படங்களில் நடித்திருந்தாலும், அவை அனைத்திலுமே, அவருக்கு சிறப்புத் தோற்றம் தான். சமீபத்தில், ஒரு இந்தி "டிவி சேனல் நடத்திய, ரியாலிட்டி ஷோவில், சானா கான், கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு, பாலிவுட் நடிகர் சல்மான் கானும், சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது, இருவருக்கும், அறிமுகம் ஏற்பட்டதை அடுத்து, சானா கானுக்கு அடித்தது, லக்கி பிரைஸ்.
சல்மான் கான் அடுத்ததாக நடிக்கும்,"மென்டல் என்ற படத்தில்,முக்கிய வேடத்தில் நடிக்கிறார், சானா கான். இதுகுறித்து, அவர் கூறுகையில்,"பாலிவுட்டுக்கு பல புதுமுகங்களை அறிமுகப் படுத்தியவர், சல்மான் கான். எனக்கும், அவர் வாய்ப்பளித்துள்ளார். கண்டிப்பாக, அவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன். சல்மான் போன்ற, மிகப் பெரிய நடிகருடன் நடிக்க, கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அந்த வாய்ப்பு, இத்தனை விரைவில் கிடைக்கும் என்பதை, சற்றும் எதிர்பார்க்கவில்லை என, நெகிழ்கிறார், சானா கான்.