Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினேகா கர்ப்பம்...? பரபரக்கும் கோலிவுட்

20 மார், 2013 - 14:46 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு சினேகா கர்ப்பமாக இருப்பதாக வந்திருக்கும் செய்திதான். ஆனால் இதனை சினேகா தரப்பு மறுத்துள்ளது. அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள் பிரசன்னாவும் சினேகாவும். அந்தபடத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே உண்டான நட்பு பின்னர் காதலாக மாறியது. தங்களது காதலை ரகசியமாக காத்து வந்த இந்த ஜோடி ஒருகட்டத்தில் அந்த காதலை அவர்களே ஒப்புக்கொண்டனர். பின்னர் கடந்த 2012ம் ஆண்டு, மே மாதம் இருவருக்கும் திருமணமும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா சினிமாவில் நடித்து வந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் படம் அவருக்கு நல்ல பெ‌யரை பெற்று தந்தது.

இந்நிலையில் நடிகை சினேகா கர்ப்பமாக இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது. சினேகா கர்ப்பமாக இருப்பதால் பிரசன்னா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை சினேகா தரப்பினர் மறுத்துள்ளது. இதுகுறித்து சினேகாவிடம் போனில் தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை. மாறாக அவரது அக்காவிடம் கேட்ட‌போது, சினேகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை மறுத்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, இப்போதைக்கு சினேகாவுக்கு அப்படியொரு எண்ணமே கிடையாது என்றும், குழந்தை பிறப்பை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாகவும், இன்னும் சினிமாவில் நல்ல ரோலில் நடிக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அடுத்தவாரம் முதல் பிரகாஷ்ராஜின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், கர்ப்பமாக இருந்தால் அவர் எப்படி நடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Vaal Payyan - Chennai,இந்தியா
22 மார், 2013 - 16:08 Report Abuse
Vaal Payyan குழந்தைக்கு டிரஸ் எங்கே வாங்குவீங்க .. சரவணா ஸ்டோர்ஸ் ஆ இல்ல ஜெயச்சந்திரன் ஆ ...
Rate this:
prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
21 மார், 2013 - 12:31 Report Abuse
prabu.usa@gmail.com இதற்கு யார் யாரெல்லாம் காரணம்னு கண்டுபிடிக்கணும்..
Rate this:
Maniraj - Bangalore,இந்தியா
21 மார், 2013 - 11:38 Report Abuse
Maniraj நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் தான்
Rate this:
maria chella pandi .p - tamilnadu,இந்தியா
21 மார், 2013 - 11:34 Report Abuse
maria chella pandi .p தேவை இல்லாத விசயம் இது ...
Rate this:
Eswar - Madurai,இந்தியா
21 மார், 2013 - 11:05 Report Abuse
Eswar வாந்திக்கு ஒரு வதந்தி..............
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in