ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"அங்காடித் தெரு அஞ்சலிக்கு, தமிழிலும், தெலுங்கிலும், மார்க்கெட் ரொம்பவும் ஸ்டெடியாகவே இருக்கிறது. புதிது, புதிதாக எத்தனை நடிகைகள் வந்தாலும், "கனமான வேடமா; கூப்பிடு அஞ்சலியை என, தயாரிப்பாளர்கள் கூறும் அளவுக்கு, அஞ்சலிக்கென, செல்வாக்கு இருக்கத் தான் செய்கிறது. இடையிடையே, கிளாமர், நகைச்சுவை படங்களிலும், நடித்து வருகிறார், அவர்.தற்போது வெளியாகியுள்ள, "வத்திக்குச்சி படத்தில், நடுத்தர குடும்ப பெண்ணாக நடித்துள்ள, அஞ்சலிக்கு, ஆர்யாவுடன் அடுத்து நடிக்கும்,"சேட்டை படத்தில், பத்திரிகையாளர் வேடமாம். சக்தி என்ற பவர்புல்லான கேரக்டரில், அந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், தன் நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, மீடியா துறையில் உள்ளவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை கவனிக்க துவங்கியுள்ளாராம், அஞ்சலி. குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை, முன்மாதிரியாக கருதி, நடிக்க திட்டமிட்டுள்ளார்.