சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்ற மலையாள நடிகை காவ்யா, இப்போது, மீண்டும் நடிப்புத் துறையில் பிசியாகி விட்டார். திருமணத்துக்கு முன், இளமையான வேடங்களில் நடித்த அவர், தற்போது, தன் நடிப்புத் திறமைக்கு தீனி போடும், எந்த கேரக்டராக இருந்தாலும், நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். தற்போது அவர் நடித்து வரும்,"எண்டே அம்மா என்ற படத்தில், அவருக்கு அம்மா ரோலாம்.அதுவும், 21 வயது இளைஞருக்கு, அம்மாவாக நடிக்கிறாராம்.
"இந்த படத்தில் எனக்கு அம்மா கேரக்டர் என்றாலும், படத்தின் முதல் பாதியில், இளம் பெண்ணாக வருகிறேன். ஒரு குடும்ப பெண்ணின், வாழ்க்கை முழுவதையும் விவரிக்கும் கேரக்டர். இதில், சில காட்சிகளில், அம்மாவாக நடிக்கிறேன். மற்றபடி, எந்த படத்திலுமே, என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன். அது, அம்மா கேரக்டராக இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படுவது இல்லை என்கிறார், காவ்யா.