Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயின் கிடைக்காவிட்டால் ஆணுக்கு பெண் வேஷம் போட்டு படத்தை முடிப்பேன்! பாண்டிராஜ்

19 மார், 2013 - 16:37 IST
எழுத்தின் அளவு:

"பசங்க" பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா". விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா சூரிய நடிக்கிறார்கள். பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், கோர்ட் வழக்கு பிரச்னையால் நின்று போனது. அதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாண்டிராஜ் பேசியதாவது:

இந்தப் படத்தை பற்றி பல்வேறு வதந்திகள் கிளம்பி இருக்கிறது. அதற்கு விளக்கம் தர வேண்டியது என் கடமை. யுவன் சங்கர் ராஜாவால்தான் தாமதமாகிறது என்பதில் உண்மை இல்லை. அவர் சரியான நேரத்திற்கு பாடல்களை போட்டுக் கொடுத்தார். மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்காக இடையில் 15 நாள் எடுத்துக் கொண்டார் அவ்வளவுதான். படத்தில் ரெயில் ஒரு முக்கிய கேரக்டராக இருப்பதால் திருச்சி பொன்மலை ரெயில்வே ஸ்டேஷனில் ரெயில் வரும்போதெல்லாம் படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருந்தது. அதனால்தான் படம் தாமதம். அதற்கு நான்தான் காரணம்.

அடுத்து விமலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஈகோ பிரச்னைகள் என்றார்கள். அதுவும் தவறு. இரண்டுபேருமே தோழில் கைபோட்டு மாமன் மச்சினன் போல இருந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு இருவருமே நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.

அடுத்து இந்தப் படத்தில் நடிக்க ஒரு முக்கிய நடிகையை கேட்டதாகவும் அவருக்காக நான் காத்திருந்ததாகவும் சொன்னார்கள். அதுவும் தவறு. குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்த நடிகை ஒருவரை, அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் என்னிடம் சிபாரிசு செய்தார். நான் அவரிடம் கதை சொல்ல சென்றோது. எனக்கு பரீட்சை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வரும் வரை காத்திருக்க முடியுமா என்று கேட்டார். யாருக்காகவும் நான் காத்திருக்க மாட்டேன். நான் நட்சதிரங்களை நம்பி படம் எடுப்பவன் இல்லை. கதையை நம்பி படம் எடுக்கிறவன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அதன்பிறகுதான் லட்டு மாதிரி இரு ஹீரோயின்களை நடிக்க வைத்தேன். ஒரு வேளை ஹீரோயின் கிடைக்காவிட்டால் ஆணுக்கு பெண் வேஷம் போட்டு படத்தை முடித்து விடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

R.Saminathan - mumbai,இந்தியா
22 மார், 2013 - 12:10 Report Abuse
R.Saminathan அற்ப்புதமான மனிதர் திரு.பாண்டியராஜ் அவர்கள்.
Rate this:
Kaan - Fahaaheel city,குவைத்
21 மார், 2013 - 00:03 Report Abuse
Kaan என்னய்யா பாண்டி இப்படி பொசுக்குனு சொல்லிபுட்ட, நம்ம லக்ஸ் பாப்பா கோவிச்சுகிருச்சு பாரு...லக்ஸ் பெண்பாவம் உன்னை சும்மா விடாது ஆமா.
Rate this:
Kaan - Fahaaheel city,குவைத்
21 மார், 2013 - 00:02 Report Abuse
Kaan பாண்டி நீங்களே அந்த வேஷம் போட்டு பாண்டிகம்மாஈ அல்லது பாண்டியம்மா அப்படின்னு பேரு வச்சு படம் வெளியிடோம்ன்னா படம் நிக்காம தியேட்டர் விட்டு பிச்சுக்கிட்டு சும்மா ஓடோ ஓடுன்னு ஓடிரும்...
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
19 மார், 2013 - 21:55 Report Abuse
itashokkumar அது சரி ஆணுக்கு பெண் வேடம் போட்டால் நீ சொல்வது போல "லட்டு" மாதிரி இருப்பங்கலான்னே
Rate this:
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
19 மார், 2013 - 18:47 Report Abuse
அரசன் கும்கி நாயகி நல்லா படிக்குற புள்ள பாஸ்..படிக்கட்டும் விடுங்க..அடுத்து பரீட்சைக்கு நேரம் ஆச்சுனு படம் எடுங்க.
Rate this:
LAX - Trichy,இந்தியா
20 மார், 2013 - 10:40Report Abuse
LAXபசங்க, மெரினா - ன்னு இவரு எடுக்கற படமெல்லாம் காசுபாக்க மட்டும்தான் பெரிய சமுதாய அக்கறை ஒன்றுமில்லை என்பதை இந்த அகம்பாவ பேச்சின்மூலம் ஒப்புக்கொண்டுள்ளார்....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in