ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கற்றது தமிழ், அங்காடித்தெரு, கலகலப்பு உள்பட பல படங்களில் நடித்தவரான அஞ்சலி, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கிறார் என்றாலும், அனுஷ்கா, தமன்னா, காஜல் அகர்வால் போன்று ஸ்டார் வேல்யூ நடிகைக்கான இடத்தை அவர் இன்னமும் பிடிக்கவில்லை. இதற்கு காரணம், அவர் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கதைகளுக்கும், தனக்கான கேரக்டர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கிறார் என்கிறார்கள். இப்படி அவர் தனக்கும் வலுவான கேரக்டர் வேண்டும் என்பதால் தான், பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் இயக்குனர்களும் அஞ்சலியை அணுகுவதில்லை என்றொரு கருத்தும் கோடம்பாக்கததில் அஞ்சலியைப்பற்றி நிலவி வருகிறது.
இதுபற்றி அஞ்சலியிடம் கேட்டபோது, பெரிய ஹீரோக்களின் படங்களுக்காக நான் அலைந்ததுமில்லை. அதேசமயம் தவிர்க்க வேண்டும் என்று நினைத்ததுமில்லை. ஆனால் கதையில் எனக்கும் முக்கியத்துவம் வேண்டும் என்று நினைப்பேன். காரணம், எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும், என்னால் நடிக்க முடியும். அதனால்தான் சும்மா ஹீரோவுடன் நாலு பாட்டுக்கு வந்து ஆடிவிட்டு போனால் மட்டும் போதும் என்று நான் திருப்தி கொள்வதில்லை. இப்படி நான் நினைப்பதால்தான் என்னை முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்க்க இயக்குனர்கள் தயங்குகிறார்கள் என்பதும் எனக்கு தெரியாமல் இல்லை. ஆனால் பெரிய ஹீரோக்களுடன் நடித்து ஸ்டார் ஹீரோயினியாக வேண்டும் என்பதைவிட சிறிய ஹீரோக்களுடன் நடித்தாலும் வெயிட்டான கதாநாயகி பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனக்கு பிடித்திருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து என்நிலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.