மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தனுஷ் நடித்த, "பொல்லாதவன் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதையடுத்து பல படங்களில் நடித்தவர், "ஹரிதாஸ் படத்தில் ஹீரோவாக நடித்து, அடுத்த கட்டத்தை எட்டியிருந்தார். இதன் பின், "வலை படத்தில், அஜீத்துடன் மோதும் வில்லனாக நடித்து வரும் கிஷோருக்கு சரித்திர கதைகளில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக, "திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ஆசைப்படும் கிஷோர், தன் நண்பர்களுடன் சேர்ந்து, அப்படியொரு படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நடிகனான பின். வில்லன், காமெடியன், அப்பா, நாயகன் என்று பல வேடங்களில் நடித்து விட்ட போதும், இந்த திப்புசுல்தான் வேடம் எனது ட்ரீம்ரோல் என்கிறார் கிஷோர்.