Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

3 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது "கந்தா"

Kandha movie to be release after 3 years
எழுத்தாளர் பாபு கே.விஸ்வநாத் (திருவாரூர் பாபு) இயக்கிய படம் "கந்தா". கரண், மித்ரா குரியன், ராஜேஷ் நடித்துள்ளனர். வி.பழனிவேல் என்பவர் தயாரித்தார். வெளிநாட்டில் படித்து விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்பும் கரண், அங்கு நடக்கும் தாதாக்கள் கொட்டத்தை அடக்குவதுதான் கதை. படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளருக்கு பணப் பிரச்னை அதனால் படம் வெளியாவது தள்ளிப்போனது. கரண் சம்பள பாக்கியை கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் இப்படி பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு படம் கிடப்பில் கிடந்தது. இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்தும் இந்தப் படத்தை கை கழுவிட்டு "தேரடிவீதி" என்ற அடுத்த படத்தை இயக்கச் சென்று விட்டார். இப்போது தயாரிப்பாளர் ஒருவழியாக பிரச்னைகளை சமாளித்து வருகிற 22ந் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறார்.

Tags »
After 3years, Kandha, releasing, march 22, 3 வருடங்களுக்கு பிறகு, வெளிவருகிறது, கந்தா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in