ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது அஜீத் விஷ்ணுவர்த்தனின் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அஜீத் முதன் முறையாக கிராமத்து பெரிய அண்ணனாக நடிக்க இருக்கிறார். அவரது தம்பிகளாக நடிக்கவும் நடிகர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டார்கள். இந்த நிலையில் படத்தின் ஸ்கிரிப்டை படித்த அஜீத், அதில் சில திருத்தங்களை சொல்லியிருக்கிறார். அதனை சரி செய்யும் பணியில் பத்து துணை இயக்குனர்களை வைத்துக் கொண்டு டிஷ்கஷன் செய்து கொண்டிருக்கிறார் சிவா. ஸ்கிரிப்ட் அஜீத்துக்கு திருப்தி தரவில்லை என்பதால் படம் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. விஷ்ணுவர்த்தன் படம் முடிந்த பிறகும் சிவாவின் ஸ்கிரிப்ட் அஜீத்துக்கு திருப்பி அளிக்கவில்லை என்றால் படம் டிராப் கூட ஆகலாம் என்று கூறுகிறார்கள்.