Advertisement

சிறப்புச்செய்திகள்

சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

இனி இயந்திரங்கள்தான் இசை அமைக்கும்: இளையராஜா

In future instruments will give music says Ilayarajaதெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு தெலுங்கில் "கொண்டேலு கோதாவரி" என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். கடந்த 8ந் தேதி வெளிவந்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனை தமிழ் நாட்டைச் சேர்ந்த குமார் என்பவர் இயக்கி உள்ளார். ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு, சந்தீப் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் தெலுங்கில் ஹிட்டானது. இதன் பாடல் சிடிக்கள் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகி உள்ளது. இதற்கான பிளாட்டினம் டிஸ்க்கை பெற்றுள்ளது. இதனை லட்சுமி மஞ்சு, டாப்ஸி ஆகியோர் இளையராஜாவிடம் வழங்கினர்.

பின்னர் இளையராஜா நிருபர்களிடம் கூறியதாவது: இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் லைவ் மியூசிக் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இசை கலைஞர்களைவிட இசை கருவிகளை கொண்டே இசை அமைக்கப்பட்டு வருகிறது. லைவ் மியூசிக் எனக்கு பிறகு யாரும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். லாஸ் ஏஞ்சல்சில் நான் நடத்திய கச்சேரியில் நூற்றுக் கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்றார்கள். இனி இதுபோன்ற கச்சேரியை நீங்கள் கேட்க முடியாது. காரணம் இனி இசை கலைஞர்களை கொண்டு யாரும் கச்சேரி நடத்த மாட்டார்கள். இதுதான் கடைசி கச்சேரி என்றேன். ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள், இசைதான் மாறியிருக்கிறது. என்றார்.

Tags »
Ilayaraja, இளையராஜா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

Vaal Payyan - Chennai,இந்தியா
2013-03-19 16:04:07 Report Abuse
Vaal Payyan திறமை இருக்கும் இடத்தில கர்வம் இருப்பது தவிர்க்க முடியாதது ... BGM இல் இவர் செய்த சாதனையை எவரும் நெருங்க கூட முடியாது ....
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
friendsmurugan - nellai  ( Posted via: Dinamalar Android App )
2013-03-18 11:31:39 Report Abuse
friendsmurugan இவர் இசை ஞானி தான் ஆனால் கொஞ்சம் ஃகெட்வெய்ட் இருக்கு
Rate this:
1 members
1 members
7 members
Share this comment
g.s,rajan - chennai ,இந்தியா
2013-03-18 10:26:31 Report Abuse
g.s,rajan Raja sir is always the great."ISAI" raal 'RAJA' ,"RAJA" raal 'ISAI". g.s.rajan,chennai.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in