Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் விஜயகாந்தை சீண்ட நினைத்த வடிவேலு! வெளியேறினார் சிம்புதேவன்!!

17 மார்,2013 - 09:59 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. அதே சிம்புதேவன் மீண்டும் வடிவேலுவை வைத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஸ்கிரிப்ட் தயார் செய்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து வடிவேலு அரசியல் புயலில் சிக்கி சிதைந்து போனதால், அந்த படவேலைகளை அப்புறப்படுத்தி வைத்தார். ஆனால் பின்னர் படமே இல்லாமல் இருந்த வடிவேலு அந்த கதையை வைத்து மீண்டும் தன்னை இயக்குமாறு சிம்புதேவனை கேட்டுக்கொண்டார். அதனால் அப்படத்தை இயக்க அவர் தயாரிப்பாளர் தேடினார். ஆனால் சூழ்நிலை சரியில்லை என்பதால் வடிவேலுவை நாயகனாக வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் நீங்களே படத்தை தயாரிக்கலாமே என்று வடிவேலு பக்கம் திரும்பினார் சிம்புதேவன். ஆனால், உஷார் பார்ட்டியான வடிவேலு, படம் தயாரிக்கிற அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. சம்பாதித்த பணத்தை வைத்து நிலபுலன்களை வாஙகினேன். ஆனால் அந்த சிங்கமுத்துவிடம் எல்லாத்தையும் ஏமாந்துவிட்டேன் என்று நழுவிக்கொண்டாராம்.

இதனால் படவேலைகள் அப்படியே நின்றது. அதனால் இதையடுத்து தெனாலிராமன் என்றொரு கதை கேட்டார் வடிவேலு. ஆனால் அந்த படத்துக்கும் வழக்கம்போல் தயாரிப்பாளர் கிடைக்காததால், கே.எஸ்.ரவிக்குமாரிடம் தஞ்சடைந்தார் வைகைப்புயல். அவரும், நான் ரெடி. யாராவது தயாரிப்பாளரை ரெடி பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு சாமி இந்தி ரீமேக் பட வேலைகளில் மூழ்கிவிட்டார். இந்த நிலையில், இம்சை அரசின் 23-ம்புலிகேசியின் இரண்டாம் பாகத்துக்கு ஒரு தயாரிபபாளருடன் வடிவேலுவை சந்தித்திருக்கிறார் சிம்புதேவன். இதனால் அதிக உற்சாகமடைந்த வடிவேலு, திடீரென்று கதையில் ஒரு கேரக்டரை திணிக்க வேண்டும் என்றாராம். என்ன கேரக்டர் என்று கேட்டபோது, ஒரு எதிர்க்கட்சி தலைவர் கேரக்டரை கதைக்குள் திணித்து அந்த கேரக்டரை நான் டேமேஜ் செய்வது போல் படமாக்க வேண்டும் என்றாராம். இதனால் அதிர்ச்சியடைந்து போன சிம்புதேவன், மீண்டும் அவர் விஜயகாந்தைதான் குறி வைக்கிறார். இவரால் நாம் ஏன் அவரை பகைத்துக்கொள்ள வேண்டும் என்று இப்போது அப்படத்தையே கைவிட்டு விட்டாராம்.

Advertisement
கவிஞர் வைரமுத்துவின் அப்பா மரணம்கவிஞர் வைரமுத்துவின் அப்பா மரணம் ராஜபக்ஷேவை எதிர்த்து போராட்டத்தில் குதிக்கிறது பெப்சி: அவசர பொதுக்குழுவில் முடிவு ராஜபக்ஷேவை எதிர்த்து போராட்டத்தில் ...

வாசகர் கருத்து

Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
19 ஏப்,2013 - 08:01
Samy Chinnathambi சோம்பு அடிவாங்கி நெளிஞ்சாலும் சத்தம் குறைய மாட்டேங்குதே
Anand Kumar - Chennai,இந்தியா
08 ஏப்,2013 - 15:08
Anand Kumar ஆப்பசைத்த குரங்கு என்றால் அது வடிவேலுக்கு நன்கு பொருந்தும்.
Anand Kumar - Chennai,இந்தியா
08 ஏப்,2013 - 15:06
Anand Kumar நீ உருப்பட மாட்ட
Cinema Raja - Kodambakkam,இந்தியா
17 மார்,2013 - 18:28
Cinema Raja வட போச்சே . .
kavi - trichy  ( Posted via: Dinamalar Android App )
17 மார்,2013 - 17:22
kavi edhudan thalayeluthu
SENTHIL - Pollachi,இந்தியா
17 மார்,2013 - 16:51
SENTHIL தவளை தன் (நாற)வாயால் கெடும்.
Mannathil Muralidharan - Singapore,சிங்கப்பூர்
17 மார்,2013 - 14:46
Mannathil Muralidharan இப்படியே இருந்தால் வடிவேலு உருபடமாட்டன்
Vaal Payyan - Chennai,இந்தியா
17 மார்,2013 - 13:09
Vaal Payyan இம்சை அரசன் செங்கண்ணனின் கோப தீ க்கு பலி ஆவது உறுதி
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
17 மார்,2013 - 12:37
Venkatesan Jayaraman வடிவேலுவுக்கு கட்டம் சரி இல்லை ... சினிமா கட்டதுரை மாறி இல்லை கேப்டன்
S.RAJA.s.v.karai - tankasi  ( Posted via: Dinamalar Android App )
17 மார்,2013 - 12:20
S.RAJA.s.v.karai பயபுள்ள வாயை வைச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்ன்ங்குதே எங்க போனாலும்
Marian - Coimbatore,இந்தியா
17 மார்,2013 - 11:34
Marian இந்த ஆள் "கொஞ்சம் வருவான்" அதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் நினைத்தேன் .... இப்ப சொல்லனும்னா "கொஞ்சம் கூட வரமாட்டான்".
Ananya Dixith - Pune,இந்தியா
17 மார்,2013 - 11:09
Ananya Dixith இதுக்கு பேறு தான் வாய கொடுத்து எதையோ புன்னாக்கீகிரது...
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mapla Singam
  Tamil New Film Maari
  • மாரி
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Karai Oram
  • கரை ஓரம்
  • நடிகர் : கணேஷ் பிரசாத்
  • நடிகை : நிகிஷா படேல்
  • இயக்குனர் :ஜே.கே.
  Tamil New Film Bahubali
  • பாகுபலி
  • நடிகர் : பிரபாஸ் ,701
  • நடிகை : அனுஷ்கா ,12
  • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in