மீண்டும் விஜயகாந்தை சீண்ட நினைத்த வடிவேலு! வெளியேறினார் சிம்புதேவன்!!
டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. அதே சிம்புதேவன் மீண்டும் வடிவேலுவை வைத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஸ்கிரிப்ட் தயார் செய்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து வடிவேலு அரசியல் புயலில் சிக்கி சிதைந்து போனதால், அந்த படவேலைகளை அப்புறப்படுத்தி வைத்தார். ஆனால் பின்னர் படமே இல்லாமல் இருந்த வடிவேலு அந்த கதையை வைத்து மீண்டும் தன்னை இயக்குமாறு சிம்புதேவனை கேட்டுக்கொண்டார். அதனால் அப்படத்தை இயக்க அவர் தயாரிப்பாளர் தேடினார். ஆனால் சூழ்நிலை சரியில்லை என்பதால் வடிவேலுவை நாயகனாக வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் நீங்களே படத்தை தயாரிக்கலாமே என்று வடிவேலு பக்கம் திரும்பினார் சிம்புதேவன். ஆனால், உஷார் பார்ட்டியான வடிவேலு, படம் தயாரிக்கிற அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. சம்பாதித்த பணத்தை வைத்து நிலபுலன்களை வாஙகினேன். ஆனால் அந்த சிங்கமுத்துவிடம் எல்லாத்தையும் ஏமாந்துவிட்டேன் என்று நழுவிக்கொண்டாராம்.
இதனால் படவேலைகள் அப்படியே நின்றது. அதனால் இதையடுத்து தெனாலிராமன் என்றொரு கதை கேட்டார் வடிவேலு. ஆனால் அந்த படத்துக்கும் வழக்கம்போல் தயாரிப்பாளர் கிடைக்காததால், கே.எஸ்.ரவிக்குமாரிடம் தஞ்சடைந்தார் வைகைப்புயல். அவரும், நான் ரெடி. யாராவது தயாரிப்பாளரை ரெடி பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு சாமி இந்தி ரீமேக் பட வேலைகளில் மூழ்கிவிட்டார். இந்த நிலையில், இம்சை அரசின் 23-ம்புலிகேசியின் இரண்டாம் பாகத்துக்கு ஒரு தயாரிபபாளருடன் வடிவேலுவை சந்தித்திருக்கிறார் சிம்புதேவன். இதனால் அதிக உற்சாகமடைந்த வடிவேலு, திடீரென்று கதையில் ஒரு கேரக்டரை திணிக்க வேண்டும் என்றாராம். என்ன கேரக்டர் என்று கேட்டபோது, ஒரு எதிர்க்கட்சி தலைவர் கேரக்டரை கதைக்குள் திணித்து அந்த கேரக்டரை நான் டேமேஜ் செய்வது போல் படமாக்க வேண்டும் என்றாராம். இதனால் அதிர்ச்சியடைந்து போன சிம்புதேவன், மீண்டும் அவர் விஜயகாந்தைதான் குறி வைக்கிறார். இவரால் நாம் ஏன் அவரை பகைத்துக்கொள்ள வேண்டும் என்று இப்போது அப்படத்தையே கைவிட்டு விட்டாராம்.
Tags »
Simbudevan, Vadivelu, imsai arasan 23am pulikesi part-2, வடிவேலு, இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி-2, சிம்புதேவன், வெளியேறினார்,